ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போவதாக சொன்ன கோபி, கடுப்பான ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போவதாக சொன்ன கோபி, கடுப்பான ஈஸ்வரி - இன்றைய
ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போவதாக சொன்ன கோபி, கடுப்பான ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி ஈஸ்வரியை கோவிலில் சந்தித்து பேசுகிறார். அப்போது நான் ராதிகாவை திருமணம் செய்ய இருப்பதாக கோபி சொல்கிறார். உடனே ஈஸ்வரி கோவப்பட்டு என்னை மீறி எப்படி நீ கல்யாணம் செய்து கொள்ள போகிறாய் என பார்க்கிறேன் என சொல்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ஈஸ்வரியை கோவிலில் சந்தித்து பேசுகிறார். அப்போது கோபி என்னுடைய மோசமான நிலைமையை பார்த்தீங்களா என கேட்க, உடனே தாய் பாசத்தில் ஈஸ்வரி எல்லாம் சரியாகிவிடும் என சொல்ல, கோபி என் நிலைமையை பாருங்க பெற்ற தாய்யை மறைந்து பார்க்க வேண்டியதாக இருப்பதாக சொல்ல, உடனே ஈஸ்வரி எல்லாம் சரியாகிவிடும். நீ எங்கே தங்கி இருக்கிறாய் என கேட்க, நான் ஹோட்டலில் தான் தங்கி இருக்கேன் என சொல்கிறார். ஈஸ்வரி வீட்டிற்கு வர சொல்ல கோபி நான் வெளியே வந்தது வந்தது தான் உங்களிடம் முக்கியமான விஷயம் சொல்ல தான் வர சொன்னேன் என சொல்கிறார். என்னது என ஈஸ்வரி கேட்க நான் ராதிகாவை திருமணம் செய்ய போகிறேன் என சொல்கிறார்.

ஈஸ்வரி அதிர்ச்சி அடைய என்ன சொல்கிறாய் கோபி என கேட்கிறார். எனக்கு வேற வழி தெரியவில்லை. நான் ராதிகாவை திருமணம் செய்ய வேண்டும் என கோபி சொல்ல, உடனே ஈஸ்வரி எதுவும் பேசாமல் இருக்கிறார். கோபி எனக்கு தெரியும் நான் சொல்வதை கேட்க அதிர்ச்சியாக இருக்கும் என ஆனால் எனக்கு வேற வழி தெரியவில்லை என கோபி சொல்கிறார். ஈஸ்வரி நிஜமாக தான் சொல்றியா என கேட்க, கோபி உண்மை தான் என சொல்கிறார். ஈஸ்வரி அதை நம்பாமல் இருக்க, சத்தியமாக எனக்கும் ராதிகாவிற்கும் கல்யாணம் நடக்க போகுது என சொல்கிறார். ஈஸ்வரி அதை கேட்டு கோபப்படுகிறார். உனக்கு என்ன பைத்தியமா என ஈஸ்வரி கேட்கிறார்.

3 பிள்ளைகளுக்கு அப்பா என்பதை மறந்துவிட்டியா என ஈஸ்வரி கேட்கிறார். என் பிள்ளை எவ்வளவு பொறுப்பாக இருக்கான் என எல்லாரிடமும் சொல்லி இருக்கேன். ஆனால் இது தெரிந்தால் எல்லாரும் என்னை கேவலமாக நினைப்பார்கள் என ஈஸ்வரி சொல்கிறார். சரி நான் எதுவும் செய்யாமல் இருக்கேன் ஆனால் எல்லாம் சரியாகிவிடுமா என கேட்க, ஈஸ்வரி எதுவும் பேசாமல் இருக்கிறார். உங்க பேச்சை கேட்டு தான் நான் வீட்டில் இருந்தேன் ஆனால் அவள் என்னை திட்டம் போட்டு என்னை வெளியே அனுப்பினால், அதுக்கு நீங்க என்ன செய்தீர்கள் என கேட்கிறார்.

ஈஸ்வரி நான் உன்னை வீட்டிற்குள் அழைத்து சென்று இருப்பேன் ஆனால் நீ நேரம் கொடுக்காமல் இப்படி செய்யலாமா என கேட்க, அந்த குடும்பத்திற்காக என் சந்தோசத்தை இழந்து வாழ்ந்து இருக்கேன். பிடிக்காமல் பாக்கியாவுடன் வாழ்ந்து இருக்கிறேன். அதை நான் மறந்தே ஆக வேண்டும் என கோபி சொல்கிறார். என் உழைப்பை எல்லாம் உரிந்து என்னை தூக்கி வெளியே போட்டீங்க, அதனால் கடைசி காலத்தில் என்னை புரிந்து கொள்ள எனக்கு துணை தேவைப்பட்டதாக கோபி சொல்கிறார். அதான் ராதிகாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன் என கோபி சொல்கிறார்.

மீண்டும் மூடப்படும் பள்ளிகள்.. 9 நாட்கள் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு!

பின் ஈஸ்வரி ஊரில் எல்லா ஆம்பளைங்களும் வீட்டிற்காக உழைக்க தான் செய்றாங்க என ஈஸ்வரி சொல்கிறார். நீ பொறுப்பாக இருந்தால் கல்யாணம் ஆன பையன் இருக்கான், கல்யாண வயசில் பையன் இருக்கான், வயசுக்கு வந்த பெண் இருக்கிறாள், அவளுடைய நிலைமையை நினைத்து பார்த்தியா என கேட்க, ஆனால் கோபி என்ன பேசினாலும் எனக்கு இந்த கல்யாணம் நடக்க வேண்டும். இனியாவை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன் என கோபி சொல்கிறார். ஈஸ்வரி என்ன கோபி வெளியே இருந்து செய்ய போறதை பற்றியே பேசுகிறாய். நீ குடும்பத்தில் இருந்து செய்தால் தான் பெருமை வெளியே வேற ஒருத்தி உடன் வாழ்ந்து கொண்டு செய்ய வேண்டாம் என ஈஸ்வரி சொல்கிறார்.

இப்பவே என்னுடன் வா என ஈஸ்வரி கூப்பிட ஆனால் கோபி நான் வரமாட்டேன் என சொல்கிறார். என்னை விட்டுவிடுங்கள் என கோபி கெஞ்ச ஈஸ்வரி நீ செய்வது உனக்கே நியாயமாக இருக்கிறதா என கேட்க, கோபி எனக்கு என் சந்தோசம் தான் முக்கியம் என சொல்கிறார். தயவு செய்து என் கல்யாணத்திற்கு வந்து ஆசிர்வாதம் பண்ணுங்கள் என சொல்ல, ஈஸ்வரி கோவப்பட்டு நீ சொல்வதை எல்லாம் நான் கேட்கமாட்டேன் என்னை மீறி எப்படி கல்யாணத்தை நடத்துவாய் என பார்க்கிறேன் என ஈஸ்வரி சொல்கிறார். மறுபக்கம் ப்ரொடியூசர் மகள் வர்ஷினி கார் பஞ்சராகி இருக்கிறது. எழில் சதீஸ் அவரை பார்த்து உதவி செய்ய வருகிறார். அப்போது அவர் வண்டி பஞ்சர் என கேட்க, எழில் அவருக்கு உதவி செய்கிறார். பின் வர்ஷினி அப்பா சொல்வதை கேட்டு படம் செய்து இருக்கலாம் என சொல்ல ஆனால் எழில் கதையில் மாற்றம் செய்ய முடியாது என சொல்கிறார்

பின் எழில் கிளம்பிவிட வர்ஷினிக்கு எழில் பேசுவது மிகவும் பிடித்துவிடுகிறது. பின் பாக்கியா சமையல் ஆர்டரில் என்ன சமைக்க வேண்டும் என சொன்னது பற்றி பேசுகிறார். ஜெனி எத்தனை பேர் வருவதாக சொன்னார்களா என கேட்க 200பேர் தான் வருவதாக சொன்னதாக சொல்கிறார். பின் தாத்தா வந்து பாக்கியாவிடம் நல்லபடியாக எல்லாம் முடிந்துவிடும் என சொல்கிறார். பின் ஈஸ்வரி கோவிலில் இருந்து வர செல்வியிடம் என்ன செய்து கொண்டிருக்கீங்க என கேட்க, செல்வி காண்ட்ராக்ட்பற்றி பேசுவதாக சொல்கிறார். ஈஸ்வரி வாழ்க்கையை இழந்துவிட்டு இப்படி சாதிக்க போகிறேன் என சொல்வது சரியா என கேட்க, பாக்கியா வாழ்க்கை போனதை நினைத்து கொண்டே இருக்காமல் குடும்பத்திற்கு தேவையானதை செய்ய வேண்டும் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here