கோபி நடந்து கொண்டதை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, கோபியை திட்டிய ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபி நடந்து கொண்டதை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, கோபியை திட்டிய ஈஸ்வரி - இன்றைய
கோபி நடந்து கொண்டதை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, கோபியை திட்டிய ஈஸ்வரி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபி நடந்து கொண்டதை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, கோபியை திட்டிய ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி மூர்த்தியிடம் நடந்து கொண்டது பிடிக்காமல் ஈஸ்வரி கோபப்படுகிறார். பின் கோபி நடந்து கொள்வது எதுவும் சரி இல்லை என சொல்ல பாக்கியாவிற்கு சிறிது சந்தேகம் வருகிறது.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோபி மூர்த்தியிடம் நடந்து கொண்டது பற்றி நினைத்து பார்க்கிறார். கோபி அவர்களை வெளியே போக சொன்னதை நினைத்து பார்க்கிறார். பின் தனம் அண்ணன் பேசியதை நினைத்து எனக்கு வருத்தமில்லை உங்களை நினைத்து தான் வருத்தமாக இருப்பதாக சொன்னதை நினைத்து பார்க்கிறார். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்க குடும்பத்துடன் வருவோம் என சொன்னதை நினைக்கிறார். அப்போது செல்வி வர நான் ஆபிஸ் வரவா என கேட்கிறார். பின் என்ன யோசிக்கிறாய் என கேட்க யோசிக்க விஷயமா இல்லை என கேட்கிறார். அவங்க கிளம்பும் போது இப்படி சண்டை போட வேண்டுமா என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் தனம் அழுதார், உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் நான் வருவேன் என சொன்னதாக சொல்ல, செல்வி அவங்க ஏன் அப்படி பேசினார்கள் என கேட்கிறார். அப்போது ஈஸ்வரி வர செல்வி அவர்களிடம் சார் அப்படி பேசியதை நினைத்து வருத்தப்படுவதாக சொல்கிறார். பின் கோபி வந்ததும் கேட்போம் எனக்கு இவன் தான் தப்பு செய்திருப்பதாக நினைப்பதாக சொல்கிறார். இவன் பயங்கரமான ஆளாக மாறி கொண்டு வருவதாக சொல்கிறார். அப்போது கோபி வர ஈஸ்வரி அவரை அழைக்கிறார். அப்போது கோபி வர ஏன் மூர்த்தி உடன் சண்டை போட்டாய் என கேட்கிறார்.

அப்போது மூர்த்தி தான் எப்போ பார்த்தாலும் என்னிடம் அட்வைஸ் செய்வதாக சொல்ல, அதனால் தான் எனக்கு பிடிக்கவில்லை என சொல்கிறார். அதற்காக அமைதியாக இருக்கலாமே என ஈஸ்வரி சொல்ல, என் மீது தான் தவறு எனக்கு கோவம் வந்ததால் தான் நான் கத்தினேன் என சொல்கிறார். அவர்கள் கிளம்பும் வரை நீங்க கீழே வரவே இல்லையே என கேட்க, அதான் கிளம்பும் போது வந்து அட்வைஸ் செய்தாரே என சொல்கிறார். பின் எனக்கு யார் அட்வைஸ் செய்தாலும் எனக்கு பிடிக்காது என சொல்கிறார்.

கோபி பொய் சொல்வதை ஈஸ்வரி கண்டுபிடித்துவிடுகிறார். இதெல்லாம் எவ்வளவு நாளைக்கு என நான் பார்க்க தான போகிறேன் என சொல்கிறார். பின் கோபி காரில் சென்று கொண்டிருக்க அப்போது அவருடைய நண்பர் போன் செய்கிறார். அப்போது என்ன பிறந்தநாளுக்கு ஏன் வரவில்லை என கேட்க, நீ தான் நிறைய பிரச்சனை என சொன்னாய் அதனால் தான் என கேட்கிறார். பின் கோபி ராதிகாவுக்கு உண்மை தெரிந்துள்ளதா என கேட்க, அப்போது இந்நேரம் தெரிந்திருந்தால் ராதிகா போன் செய்து இருப்பாளே என சொல்கிறார்.

கோபி பற்றி பேச வேண்டாம் என நினைக்கும் குடும்பம், கடைகாக கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயார் செய்யும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பின் ராதிகா போனை எடுக்க, கோபியை உடனே வீட்டிற்கு வர சொல்லி ராதிகா சொல்கிறார். பின் ராதிகாவுக்கு என்ன உண்மை தெரிய போகிறதோ எப்படி எல்லாம் சமாளிக்க இருக்கிறேனோ என நினைக்கிறார். பின் எழில் வர செல்வி ஈஸ்வரி கோபியை திட்டியதை சொல்கிறார். பின் செல்வி கிளம்ப, பாக்கியா இவள் என்னமோ அப்பாவிற்கு இன்னொரு குடும்பம் இருப்பது போல பேசுகிறார் என சொல்கிறார். அப்போது எழில் அப்படி எல்லாம் இருக்காது என நினைக்கிறியா என கேட்க அப்பாவிற்கு அப்படி எல்லாம் பழக்கம் இருக்காது என சொல்ல, பின் எழில் அப்பாவை இவ்வளவோ தூரம் நம்பாதே என சொல்கிறார். அப்பாவை விட்டுவிடு என சொல்ல இது எல்லாரும் சேர்ந்த குடும்பம் தான் இப்படி எல்லாம் பேசாதே என பாக்கியா எழிலிடம் சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here