
கேட்டரிங் ஆர்டருக்கு அமிர்தாவை சேர்த்து கொள்ளும் பாக்கியா, இனியாவை திட்டிய பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கேட்டரிங் ஆர்டர் வரிசையாக இருப்பதால் அவருடன் ஜெனி மற்றும் அமிர்தாவை சேர்த்துக் கொள்கிறார். பின் இனியா போன் உடன் இருப்பதால் ராதிகா அவரை திட்டுகிறார்
பாக்கியலட்சுமி
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கேட்டரிங் ஆர்டரை பற்றி ஜெனி அமிர்தாவிடம் சொல்கிறார். பின் வரிசையாக ஆர்டர் இருக்கிறது. அதனால் எல்லா ஏற்பாடுகளையும் உடனே திட்டமிட வேண்டும் என பாக்கியா சொல்கிறார். பின் செல்வி அமிர்தாவை உங்களுடன் கூட்டி செல்லுங்கள் என சொல்ல, பாக்கியா சரி என சொல்கிறார். பின் ஜெனி நானும் வருவேன் என சொல்ல, ஆனால் பாக்கியா வேண்டாம் என சொல்கிறார். மறுபக்கம் இனியா ட்யூசனில் இருக்க, சார் பாடம் நடத்தி கொண்டிருக்கிறார்.
அப்போது ஒருவன் ரோஜா பூவுடன் வந்து சாருக்கு பூ கொடுக்கிறான். இனியாவும், அவரது தோழியும் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் மிகவும் அழகாக இருப்பதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். பின் சார் கிளம்ப இனியாவிடம் அவரது தோழி அவன் அழகாக இருப்பதாக பேசுகிறாள். பின் கிளாஸ் முடிந்து கிளம்ப இனியாவிடம் அவன் பேச வருகிறார். ஆனால் இனியா பேசாமல் இருக்க அவரது தோழி அவனிடம் பேசுகிறார். அதன் பின் இனியாவும் பேசுகிறாள்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மறுப்பக்கம் பாக்கியா வீட்டில் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க, உடனே ஜெனி அமிர்தாவை அழைத்துக் கொண்டு வர செல்கிறார். ஆனால் ஈஸ்வரி அதை பார்த்து பயங்கரமாக கோபப்படுகிறார். பின் செழியன் இந்த குடும்பம் இப்படி ஆக எழில் தான் காரணம் என சொல்ல, உடனே பாக்கியா உங்க அப்பா எதுவும் செய்யவில்லையா என கேட்டு கோபப்படுகிறார். பின் எல்லாரும் சாப்பிட்டு விட்டு கிளம்ப, எழில் அமிர்தாவை சாப்பிட பாக்கியா அழைக்கிறார். பின் ஜெனியும் வர ஈஸ்வரி கோவப்பட்டது பற்றி சொல்கிறார். பின் அமிர்தா அதை கேட்டு வருத்தப்பட, பாக்கியா ஜெனியை அமைதியாக இருக்க சொல்கிறார். பின் பாக்கியா அமிர்தாவை கொஞ்சுகிறார்.
பின் சரண் இனியாவிற்கு மெசேஜ் அனுப்புகிறார். இனியா படிக்காமல் போனில் சரணிற்கு சாட் செய்கிறார். அதை கோபி பார்க்காமல் இருக்கிறார். பின் ராதிகா வந்து பார்த்துவிட்டு இனியா படிக்காமல் போனை நொண்டி கொண்டிருப்பதை பார்த்து கோபப்படுகிறார். ராதிகா இனியாவிடம் படித்து முடித்துவிட்டியா என கேட்க, நான் படித்துக் கொண்டு தான் இருக்கேன் என சொல்கிறாள். கோபி குழந்தையை திட்டதே என சொல்ல, நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கேன் நீ போனை தான் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என ராதிகா சொல்ல, ஆனால் இனியா நான் படித்துக் கொண்டு தான் இருக்கேன் என சொல்கிறார். போனில் யாரிடம் மெசேஜ் செய்கிறாய் என ராதிகா கேட்க, இனியா இதெல்லாம் நீங்க ஏன் கேட்கிறீர்கள் என கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.