
20 லட்சத்தில் 2 லட்சம் பணத்தை கோபி முகத்தில் வீசிய பாக்கியா.. அதிர்ச்சியில் ஈஸ்வரி – வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி பாக்கியாவிடம் 20 லட்சம் கொடுக்க வேண்டும் என சவால் விட, அதற்கு முதல் படியாக பாக்கியா 2 லட்சத்தை கோபியிடம் கொடுக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி
“பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பிற்கும் சுவாரஸ்யத்திற்கும் குறைவில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பல திருப்பங்கள் அடுத்தடுத்த எபிசோடுகளில் வர இருக்கிறது. சென்ற வாரம் வரை கோபி தன்னுடைய வீட்டை காலி செய்ய சொல்ல, பாக்கியா அதற்கு தயாராக இருக்கிறார். ஆனால் ஈஸ்வரி கெஞ்சி கேட்டதால் ராமமூர்த்தியின் சொத்துக்களை வாங்கி கொண்டு, கோபி பாக்கியாவிடம் 6 மாதத்திற்குள் 20 லட்சம் கொடுக்க வேண்டும் என சவால் விடுகிறார்.
விஜய் டிவியின் முக்கிய சீரியலில் அடுத்தடுத்து நடக்கும் பெரிய மாற்றங்கள் – இதுக்கு மேல தாங்காது பா!!
பாக்கியாவும் அதனை ஏற்றுக் கொள்கிறார். எப்படியாவது சவாலில் ஜெயிக்க வேண்டும் என நினைத்து பாக்கியா தொடர்ந்து 7 நாட்கள் நடக்கும் கல்யாணத்தில் சமைக்கிறார். இந்நிலையில் கோபி பாக்கியா வீட்டிற்கு வந்து எதற்கு வர சொன்னீங்க என கேட்கிறார். பாக்கியா நான் தான் வர சொன்னேன் என சொல்லிவிட்டு கோபியிடம் 2 லட்சத்திற்கு செக் கொடுக்கிறார். நீங்க சொன்ன 20 லட்சத்தில் 2 லட்சம் கொடுத்து விட்டேன். இன்னும் 18 லட்சம் தான் என பாக்கியா சொல்ல, கோபி அதிர்ச்சி அடைகிறார். ஈஸ்வரி அதை பார்த்து அதிர்ச்சி அடைய, ராமமூர்த்தி பாக்கியாவை நினைத்து பெருமைப்படுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.