கோபியை எச்சரிக்கும் ராமமூர்த்தி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு! வைரலாகும் வீடியோ!

0
கோபியை எச்சரிக்கும் ராமமூர்த்தி - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த ட்விஸ்டு! வைரலாகும் வீடியோ!
கோபியை எச்சரிக்கும் ராமமூர்த்தி - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த ட்விஸ்டு! வைரலாகும் வீடியோ!
கோபியை எச்சரிக்கும் ராமமூர்த்தி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு! வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் படுத்த படுக்கையாக இருக்கும் ராமமூர்த்தியை பார்க்க வரும் கோபிக்கு, அவர் வாயை திறந்து பேசி திட்டுவது போல கனவு வர, அவர் அதிர்ச்சியாகின்றவாறு வெளியான வீடியோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்

தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சேமே இல்லாமல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் சுமார் 400 எபிசோடுகளை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த தொடர் பாக்கியா என்ற ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதால், பலருக்கும் இது பேவரைட் ஆக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலுக்கு குடும்ப ஆடியன்ஸ் அதிகம். அந்த வகையில் பல்வேறு ஸ்வாரசியங்கள் நிறைந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கதைக்களம் தற்போது முக்கியமான கட்டத்திற்கு வந்திருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் கோபியின் ரகசிய காதல், திருமணம் என அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கும் ராமமூர்த்தி கீழே இடறி விழுந்து வாய் பேசமுடியாமல் போகிறார். இப்போது கோபி பற்றிய உண்மையை பாக்கியாவிடம் யார் சொல்லுவார், ராதிகா – கோபி திருமணம் எப்படி நிறுத்தப்படும் என்று கதைக்களத்தில் ஏகப்பட்ட திருப்பங்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கிடையில் இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோடில் அப்பாவை பார்க்க அவரது ரூமுக்கு வரும் கோபிக்கு வாய் பேச முடியாமல் இருக்கும் ராமமூர்த்தி அவரை திட்டுவது போல ஒரு கனவு வருகிறது.

மத்திய அரசின் PMAY ‘அனைவருக்கும் வீடு’ திட்டம் – 17 லட்சம் பேருக்கு மானியம்!

அதாவது, ராமமூர்த்தியின் கட்டிலுக்கு பக்கத்தில் அமர்ந்து கோபி அவரை பார்த்து கொண்டிருக்க, திடீரென கண் விழிக்கும் ராமமூர்த்தி டேய் இந்த குடும்பத்திற்கு துரோகம் செய்ய உனக்கு எப்படி மனம் வந்தது. நீயெல்லாம் மனுஷனா. பாக்கியா உன்னை நன்றாக தானே பார்த்து கொண்டாள். 3 பிள்ளைகளுக்கு அப்பா மாதிரியாகவா நீ நடந்து கொண்டிருக்கிறாய். மானம் கெட்டவனே. உன்னை அப்படியே விட்டு விடுவேன் என்று நினைத்தாயா. அப்படியே படுத்து கிடக்கிறான் என்று நினைத்தாயா. கொன்று விடுவேன் உன்னை. வெட்டி போட்டு விடுவேன் என்று பயங்கரமாக திட்டுவது போல கோபிக்கு தோன்றுகிறது.

உடனே அங்கிருந்து எழும்பிய கோபி, இதெல்லாம் கனவா. அவர் திட்டவில்லையா. கோபி உனக்கு முத்தி போச்சு என்று தனியாக புலம்புகிறார். இந்த வீடியோ வலைதளங்களில் வெளியாக, இப்போ தான் கோபி சார் நீங்க சரியா கண்டு பிடித்திருக்கிறீர்கள். கோபி உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். இப்படியே போனால் கோபி இன்னும் கொஞ்ச நாளில் ‘காதல்’ பரத் போல மாறி விடுவார் போல இருக்கே என்று ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here