கண்ணம்மாவும், பாரதியும் ஒன்று சேர்வது எப்போது? ஹேமா, லட்சுமி கொடுத்த விளக்கம்! ரசிகர்கள் உற்சாகம்!

0
கண்ணம்மாவும், பாரதியும் ஒன்று சேர்வது எப்போது? ஹேமா, லட்சுமி கொடுத்த விளக்கம்! ரசிகர்கள் உற்சாகம்!
கண்ணம்மாவும், பாரதியும் ஒன்று சேர்வது எப்போது? ஹேமா, லட்சுமி கொடுத்த விளக்கம்! ரசிகர்கள் உற்சாகம்!
கண்ணம்மாவும், பாரதியும் ஒன்று சேர்வது எப்போது? ஹேமா, லட்சுமி கொடுத்த விளக்கம்! ரசிகர்கள் உற்சாகம்!

பாரதி கண்ணம்மா தொடரின் ஷூட்டிங்கின் போது ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் லைவ் வந்துள்ளனர். அப்போது கண்ணம்மாவும், பாரதியும் எப்போது ஒன்று சேருவார்கள் என ரசிகர் கேட்ட கேள்விக்கு இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.

ஹேமா மற்றும் லட்சுமி லைவ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. தனது அப்பாவை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என லட்சுமி துடித்துக் கொண்டிருக்கிறார். மறுபுறம் ஹேமா தனது அப்பாவிற்கு சமையல் அம்மாவை திருமணம் செய்து வைத்துவிடலாம் என திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

“பாக்கியலட்சுமி” சீரியலில் இனியாவின் தங்கை பிறந்தநாள் விழா – குவியும் வாழ்த்துக்கள்!

இந்நிலையில் ஷூட்டிங்கில் இருக்கும் போது ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து லைவ் வருகின்றனர். ரசிகர்கள் பலரும் லட்சுமியை பாட சொல்லி கேட்கிறார்கள். லட்சுமியும் குக்கூ குக்கூ பாடல் மற்றும் பீஸ்ட் திரைப்படத்தின் ஹலமதி பாடலை பாடுகிறார். பலரும் கண்ணம்மாவினை டான்ஸ் ஆடும்படி கேட்கிறார்கள். பிறகு ரசிகர் ஒருவர் எப்போது தான் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேருவார்கள் என கேட்கிறார். அதற்கு கண்ணம்மா நக்கலாக அதனை இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறுகிறார்.

நாகசைதன்யாவுடன் உறவை முழுவதும் முறித்துக் கொண்ட சமந்தா – ரசிகர்கள் அதிர்ச்சி!

பின்பு ஒருவர், லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் உண்மையிலேயே சகோதரிகள் தானா என கேட்கிறார். அதற்கு நாங்கள் இருவரும் சகோதரிகள் அல்ல, நண்பர்கள் தான் என கூறியுள்ளனர். இருவரும் சிறு குழந்தைகளாக இருந்தாலும் பேச்சில் தெளிவாக எதற்கும் அசராத குழந்தைகளாக இருந்து வருகின்றனர். அப்பா பாரதி, அம்மாவை எப்போது தான் புரிந்து கொள்வார் என ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் லைவ்வில் சுட்டித்தனமாக பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!