உக்ரைனை விட்டு வெளியேறிய அதிபர் ஜெலன்ஸ்கி? மறுப்பு தெரிவித்து வீடியோ! இறுதி வரை போராடுவதாக ஆவேசம்!

0
உக்ரைனை விட்டு வெளியேறிய அதிபர் ஜெலன்ஸ்கி? மறுப்பு தெரிவித்து வீடியோ! இறுதி வரை போராடுவதாக ஆவேசம்!
உக்ரைனை விட்டு வெளியேறிய அதிபர் ஜெலன்ஸ்கி? மறுப்பு தெரிவித்து வீடியோ! இறுதி வரை போராடுவதாக ஆவேசம்!
உக்ரைனை விட்டு வெளியேறிய அதிபர் ஜெலன்ஸ்கி? மறுப்பு தெரிவித்து வீடியோ! இறுதி வரை போராடுவதாக ஆவேசம்!

ரஷ்யாவுடனான போரில் உலக மக்களின் கவனம் பெற்று வரும் உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி அந்நாட்டை விட்டு வெளியேறியதாக பரவிக்கொண்டிருக்கும் வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், ரஷ்யாவை எதிர்த்து இறுதி வரை போராடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் ஓட்டம்

இன்றுடன் (பிப்.26) மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் உக்ரைனின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எல்லை மீறி இருக்கும் நிலையில், உக்ரைனின் கைகள் தளர்ந்து போய்க்கொண்டிருக்கிறது. ஏற்கனவே உக்ரைனை விட 3 மடங்கு பலம் மிக்கதாக இருக்கும் ரஷ்ய படையுடன் போரிட முடியாமல், திணறிக்கொண்டிருந்த வேளையில் உலக நாடுகளின் ஆதரவு இல்லாமல் தனித்து போராடுவதாகவும், கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகவும் உக்ரைன் அரசு குறிப்பிட்டிருந்தது. இதற்கு மத்தியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரிக்க, உக்ரைனின் தலைநகர் கீவை ரஷ்யா சுற்றி வளைத்துள்ளது.

ஏப்ரல் 10 முதல் மே 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு திட்டம்!

மேலும் அந்நாட்டின் அணு ஆயுத கிடங்குகளையும் ரஷ்யா கைப்பற்றி இருக்கிறது. இந்த போரில் உலக மக்களின் அதிக கவனம் ஈர்த்து வரும் உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுக்கு தானும் தனது குடும்பமும் தான் அவசியம் என்றும், அவர்களது உயிரை எடுக்க வேண்டும் என்று நினைப்பதாக சில உருக்கமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். தொடர்ந்து ராணுவ வீரர்களுடன் சேர்ந்து உக்ரைனுக்காக அவர் போராடி வருவதும் சமூக வலைதளங்களில் வெளியாகி ஆதரவுகளை பெற்று வருகிறது.

இந்த நிலையில் உக்ரைனில் 3வது நாளாக நடைபெற்று வரும் தாக்குதல்களில், துப்பாக்கிச் சண்டை, வான் தாக்குதல், குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் ரஷ்யப் படைகள் உக்ரைனின் அதிபர் மாளிகையை நோக்கி செல்வதாகவும், தலைநகர் கீவில் உள்ள வடக்கு மாவட்டங்களை முற்றுகையிட்டுதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்த சில நாட்களிலேயே கீவ் நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் என்று அமெரிக்க உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இந்த கலவரத்திற்கு மத்தியில் ரஷிய படையெடுப்பால் உக்ரைனை விட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த தகவலை மறுத்த அவர், ‘நாங்கள் அனைவரும் இங்கே தான் இருக்கிறோம். எங்கள் ராணுவம் இங்கே உள்ளது. எங்கள் நாட்டையும், சுதந்திரத்தையும் காத்துக்கொள்ள உறுதியுடன் போராடுவோம். இறுதி வரை போராடுவோம்’ என்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ராணுவ தளபதி உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் இடம்பிடித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!