புதிய கார் வாங்கிய விஜய் டிவி ‘வேலைக்காரன்’ சீரியல் பிரபலம் – ரசிகர்கள் வாழ்த்து!

0
புதிய கார் வாங்கிய விஜய் டிவி 'வேலைக்காரன்' சீரியல் பிரபலம் - ரசிகர்கள் வாழ்த்து!
புதிய கார் வாங்கிய விஜய் டிவி 'வேலைக்காரன்' சீரியல் பிரபலம் - ரசிகர்கள் வாழ்த்து!
புதிய கார் வாங்கிய விஜய் டிவி ‘வேலைக்காரன்’ சீரியல் பிரபலம் – ரசிகர்கள் வாழ்த்து!

சமீபத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் புதிதாக கார் வாங்கும் செய்தி வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் “வேலைக்காரன்” சீரியல் நடிகர் சபரி தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

நடிகர் சபரி:

விஜய் டிவி சீரியல்கள் என்றாலே அதில் புதுமைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அந்த சீரியல் ஹிட் ஆகுதோ இல்லையோ ஆனால் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் மக்களிடம் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் பிரபலமான சீரியலில் ஒன்று தான் வேலைக்காரன் சீரியல். இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் சபரி நடித்து வருகிறார். மாறுபட்ட குடும்ப கதையை கொண்டுள்ளதால் இந்த சீரியல் பார்க்க அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் விஜய் டிவி பிரபலங்கள் கார் வாங்கும் செய்தி வெளியாகி வருகிறது.

விஜய் டிவியில் திடீரென நிறுத்தப்படும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் – ரசிகர்கள் ஷாக்! என்ன காரணம் தெரியுமா?

குக் வித் கோமாளி புகழ், சரத், கலக்கப் போவது யாரு ஈரோடு மகேஷ், ஜாக்லின், மணிமேகலை, பிக்பாஸ் ஷிவானி, தாடி பாலாஜி, என பலர் புதிதாக கார் வாங்கி இருக்கின்றனர். அவர்களை தொடர்ந்து விஜய் டிவியில் மதியம் ஒளிபரப்பாகும் வேலைக்காரன் சீரியல் நடிகர் சபரி புதிய கார் வாங்கி இருக்கிறார். கொரோனா ஊரடங்கின் போது இந்த சீரியல் தொடங்கப்பட்டு மக்களின் ஆதரவுடன் தற்போது வரை ஒளிபரப்பாகி வருகிறது.

ராதிகாவுடன் சேர்ந்து ஏமாற்றும் கோபி, எழிலிடம் சொல்லி வருத்தப்படும் பாக்கியா – அடுத்து வரப்போகும் எபிசோட்!

ஆரம்பத்தில் இந்த சீரியலை அனைவரும் ரஜினிகாந்தின் முத்து படம் போல இருக்கிறது என விமர்சித்து வந்தாலும் சீரியலில் கதாநாயகன் சபரியின் நடிப்பை பார்த்து மக்கள் மத்தியில் பிடித்தமான தொடராக மாறிவிட்டது. இந்த சீரியலில் வேலன் கதாபாத்திரத்தில் சபரிநாதன் நடிக்கிறார். இவர் ஆரம்பத்தில் ஆர்ஜே, விஜே, மாடல், மோட்டிவேஷன் ஸ்பீக்கர் என பல துறைகளில் இருந்திருக்கிறார். சினிமாவில் எப்படியாவது நல்ல நடிகராக வேண்டும் என்ற கனவோடு பல ஷார்ட் பிலிம்களில் நடித்திருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!