வேத காலம்

0

வேத காலம்

ஹரப்பா பண்பாட்டின் நகரங்கள் கி.மு.1500 ஆம் ஆண்டுவாக்கில் அழிந்தன. அவர்களது பொருளாதார, ஆட்சியமைப்பு முறைகளும் மெல்ல அழியத் தொடங்கின. இக்காலத்தில்தான் இந்தோ – ஆரிய மொழியான வடமொழி பேசுபவர்கள் இந்தோ – ஈரானியப் பகுதியிலிருந்து வடமேற்கு இந்தியாவிற்குள் நுழைந்தனர். தொடக்கத்தில் வடமேற்கு மலைகளிலிருந்த கணவாய்கள் வழியாக குறைந்த எண்ணிக்கையிலான மக்களே வந்திருக்கக்கூடும். வடமேற்கு சமவெளிகளிலும், பஞ்சாப் சமவெளிகளிலும் அவர்கள் தங்கள் ஆரம்பகால குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் இந்தோ – கங்கைச் சமவெளிpக்கு இடம் பெயர்ந்தனர். கால்நடைகளை வளர்க்கும் கூட்டத்தவர்களாக அவர்கள் இருந்தமையால் பசுமையான புல்வெளிகளை அவர்கள் தேடிச் சென்ற வண்ணம் இருந்தனர். கி.மு.ஆறாம் நூற்றாண்டுவாக்கில் அவர்கள் வட இந்தியா முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டனர். எனவே வடஇந்தியா ஆரியவர்த்தம் என அழைக்கப்பட்டது. வேதகாலத்தை ரிக்வேத காலம் அல்லது முந்தைய வேதகாலம் (கி.மு.1500 – கி.மு.1000) என்றும் பிந்தைய வேதகாலம் (கி.மு.1000 – கி.மு.600) என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

ஆரியர்களின் பூர்வீகம்

 • ஆரியர்களின் பூர்விகம் என்பது விவாதத்துக்குரிய பொருளாகும். இதுபற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பல்வேறு அறிஞர்கள் வெவ்வேறு பகுதிகளை ஆரியர்களின் பூர்வீகமாக குறிப்பிடுகின்றனர்.
 • ஆர்க்டிக் பகுதி, ஜெர்மனி, மத்திய ஆசியா, தெற்கு ரஷ்யா போன்ற பகுதிகள் அவர்களது பூர்வீகமாக கருதப்படுகின்றன. பாலகங்காதார திலகர் வானவியல் கணக்குகளை ஆதாரமாகக் கொண்;டு ஆரியர்கள் ஆர்க்டிக் பகுதியிலிருந்து வந்தவர்கள் என வாதிடுகிறார்.
 • இருப்பினும் தெற்கு ரஷியப்பகுதியே ஆரியர்களின் இருப்பிடம் என்ற கருத்தே ஏற்கத்தக்கதாக உள்ளது. வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர்.
 • அங்கிருந்து ஆரியர்கள் ஆசியா, ஐரோப்பா ஆகிய பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருக்கக்கூடும். கி.மு.1500 ஆம் ஆண்டுவாக்கில் அவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர்.
 • இந்தோ – ஆரியர்கள் என அவர்களை அழைக்கிறோம். இந்தோ – ஆரிய மொழியான வடமொழியை அவர்கள் பேசிவந்தனர்.
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

வேத இலக்கியங்கள்

 • ‘வித்’ என்ற வேர்ச் சொல்லிலிருந்து ‘வேதம்’ என்ற சொல் பிறந்தது. அதற்கு ‘அறிதல்’ என்று பொருள். வேதம் என்றால் “உயர்வான அறிவு” என்றும் பொருள் கூறலாம்.
 • வேதங்கள் நான்கு – ரிக், யஜூர், சாம, அதர்வ. இந்த நான்கிலும் ரிக்வேதம் பழமையானது. அதில் 1028 பாடல்கள் உள்ளன.
 • பல்வேறு கடவுளைப் புகழ்ந்து இந்த பாடல்கள் புனையப்பட்டிருக்கின்றன. சடங்குகளின்போது பின்பற்றப்படுவதற்காக பல்வேறு விவரங்கள் யஜூர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
 • சடங்கின்போது இசைப்பதற்காகவே இயற்றப்பட்டது சாம வேதம். இதிலிருந்தே இந்திய இசை தோன்றியதாகக் கருதப்படுகிறது. பல்வேறு சடங்குகள்பற்றி அதர்வ வேதம் குறிப்பிடுகிறது.
 • நான்கு வேதங்கள் தவிர, பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யகங்கள், மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்ற சமய இலக்கியங்களும் உள்ளன.
 • வழிபாடு மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள்; பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன. ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கையின் புரியாத புதிர்கள் போன்ற தத்துவ விளக்கங்களைக் கூறுவது உபநிடதங்கள்.
 • காட்டு இலக்கியம் எனக் கூறப்படும் ஆரண்யங்கள் மந்திரம், வேள்வி, பலியிடுதல் போன்றவற்றை கூறுகிறது. இராமாயணத்தை வால்மீகியும் மகாபாரதத்தை வேத வியாசரும் இயற்றினர்.

ரிக் வேத காலம் (அல்லது) முந்தைய வேதகாலம் (கி.மு. 1500 கி.மு. 1000)

 • ரிக் வேத காலத்தில், ஆரியர்கள் பெரும்பாலும் சிந்துப் பகுதியிலேயே வாழ்ந்தனர். ரிக் வேதத்தில் ‘சப்த சிந்து’ அல்லது ஏழு நதிகள்பாயும் பகுதி என்ற குறிப்பு வருகிறது.
 • பஞ்சாபில் பாயும் ஜீலம், சீனாப், ராவி, பியாய், சட்லஜ் என்று ஐந்து நதிகளோடு சிந்து மற்றும் சரஸ்வதி ஆகிய ஏழு நதிகளையே இது குறிக்கிறது.
 • ரிக் வேதப் பாடல்களிலிருந்து ரிக்வேதகால மக்களின் அரசியல், சமூக பண்பாட்டு வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ளலாம்.

ரிக்வேத கால அரசியல்

 • குலம் அல்லது குடும்பம் என்பதே ரிக் வேதகால அரசியலுக்கு அடிப்படையாக இருந்தது. பல குடும்பங்கள் இணைந்து கிராமம் உருவாயிற்று.
 • கிராமத்தின் தலைவர் கிராமணி எனப்பட்டார். பல கிராமங்கள் இணைந்து விசு என்ற அமைப்பு தோன்றியது. இதன் தலைவர் ‘விஷயபதி’. மிகப்பெரிய அரசியல் ஒருங்கிணைப்பு ‘ஜன’ எனப்பட்டது.
 • ரிக்வேத காலத்தில் பரதர்கள், மத்ச்யர்கள், யதுக்கள், புருக்கள் போன்ற பல்வேறு அரச குலங்கள் இருந்தன. அரசின் தலைவன் ராஜன்.
 • ரிக்வேத காலத்தில் பெரும்பாலும் முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது. பரம்பரை வாரிசு முறையே பின்பற்றப்பட்டது.
 • நிர்வாகத்தில் அரசனுக்கு உதவியாக புரோகிதரும். சேனானி என்ற படைத்தளபதியும் இருந்தனர். சபா, சமிதி என்ற இரண்டு புகழ்வாய்ந்த அவைகளும் இருந்தன.
 • சபா என்பது ஊர்ப்பெரியோர் அடங்கிய அவையாகவும், சமிதி என்பது பொது மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவையாகவும் விளங்கின.

சமூக வாழ்க்கை

 • தந்தை வழியை அடிப்படையாகக் கொண்டதே ரிக்வேத கால சமூகம். சமூகத்தின் அடிப்படையாக விளங்கியது கிரஹம் அல்லது குடும்பம்.
 • குடும்பத்தின் தலைவர் கிரஹபதி. பொதுவாக ஒருதார மணம் வழக்கிலிருந்தது. அரச மற்றும் உயர் குடியினரிடையே பலதார மணமும் நடைமுறையில் இருந்தது.
 • இல்லப் பொறுப்புகளை கவனித்து வந்த மனைவி முக்கிய சடங்குகளிலும் பங்கெடுத்துக் கொள்வது வழக்கம். ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஆன்மீகம் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
 • அபலா, விஸ்வவாரா, கோசா, லோபமுத்ரா போன்ற பெண் கவிஞர்களும் ரிக்வேத காலத்தில் வாழ்ந்தனர். பொது அவைகளிலும் பெண்கள் பங்கெடுத்துக் கொண்டனர். சிறார் மணமோ உடன்கட்டையேறும் ‘சதி’ வழக்கமோ ரிக்வேத காலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download
 • பருத்தி மற்றும் கம்பளியாலான ஆடைகளை ஆண் பெண் இருபாலரும் அணிந்தனர். இருபாலரும் பல்வேறு வகையிலான ஆபரணங்களை அணிந்தனர்.
 • கோதுமை, பார்லி, பால், தயிர், நெய், காய்கறிகள், கனிகள் போன்றவை முக்கிய உணவுப் பொருட்களாகும். பசு புனித விலங்காக கருதப்பட்டதால் பசு இறைச்சி உண்பதற்கு தடையிருந்தது.
 • தேரோட்டப் போட்டி, குதிரையோட்டம், சதுரங்கம், இசை, நடனம் போன்றவை அவர்களது இனிய பொழுதுபோக்குகள். புpந்திய வேத காலத்தில் இருந்ததைப்போல் ரிக்வேதகால சமூகத்தில் பிரிவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கவில்லை.

பொருளாதார நிலைமை

 • மேய்ச்சல் நில மக்களாக விளங்கிய ரிக்வேத காலமக்களின் முக்கியத் தொழில் கால்நடை வளர்ப்பாகும். கால்நடைகளை அடிப்படையாகக் கொண்டே அவர்களது செல்வம் மதிப்பிடப்பட்டது.
 • வடஇந்தியாவில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழத் தொடங்கிய பின்னர் வேளாண் தொழிலை மேற்கொண்டனர். இரும்பின் பயனை நன்குணர்ந்திருந்த அவர்களால் வெகு எளிதாக காடுகளை திருத்தி பரவலான விளைநிலங்களை உருவாக்க முடிந்தது.
 • மற்றொரு முக்கியத் தொழில் தச்சுவேலை. காடுகளை அழிக்கும்போது கிடைத்த ஏராளமான மரங்களால் இத்தொழில் பெரிதும் பயன்பெற்றது. தேர்களடää கலப்பைகள் போன்றவற்றை தச்சர்கள் உற்பத்தி செய்தனர்.
 • உலோகக் கலைஞர்கள் செம்பு, வெண்கலம் மற்றும் இரும்பாலான பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்தனர். நூல் நூற்றல் மற்றொரு முக்கிய தொழிலாகும். பருத்தி மற்றும் கம்பளி ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டன.
 • பொற்கொல்லர்கள் ஆபரணங்களையும், குயவர்கள்; வீட்டு உபயோகத்திற்கான மட்பாண்டங்களையும் உற்பத்தி செய்தனர்.
 • வணிகம் மிகமுக்கிய பொருளாதார நடவடிக்கையாகும். நதிகள் போக்குவரத்துக்கு பெரிதும் உதவின. பண்டமாற்று முறையிலேயே வணிகம் நடைபெற்றது.
 • காலப்போக்கில் ‘நிஷ்கம்’ என்ற தங்க நாணயங்கள் பெரும் வர்த்தகங்களில் செலாவணியாக பயன்படுத்தப்பட்டன.

சமயம்

 • நிலம், நெருப்பு, காற்று, மழை, இடி மின்னல்; போன்ற இயற்கை சக்திகளை ரிக்வேத கால மக்கள் வழிபட்டனர். இவற்றை கடவுளராக உருகவகப்படுத்தி வழிப்பட்டனர்.
 • பிருதிவி (பூமி), அக்னி (நெருப்பு), வாயு (காற்று), வருணன் (மழை), இந்திரன் (இடிமின்னல்) ஆகிய கடவுளர்கள் ரிக்வேத காலத்தில்; புகழ் பெற்றிருந்தனர்.
 • முந்தைய வேத காலத்தில் இந்திரன் மிகவும் புகழ்பெற்று விளங்கினான். இந்திரனுக்கு அடுத்த நிலையில் இருந்த அக்னி கடவுளருக்கும் மனிதருக்கும் இடையே உறவுப்பாலமாக இருந்தார்.
 • இயற்கைச் சமநிலையை பாதுகாக்கும் கடவுளாக வருணன் விளங்கினார். ஆதித்தி, உஷஸ் போன்ற பெண் கடவுளரும் இக்காலத்தில் வழிபடப்பட்டனர்.
 • ஆலயங்களோ, சிலை வழிபாடோ முந்தைய வேதகாலத்தில் இல்லை. நற்பயன்களை எதிர்பார்த்து கடவுளருக்கு வழிபாடுகள் செய்யப்பட்டன.
 • நெய், பால், தானியம் போன்றவை படைக்கப்பட்டன. வழிபாட்டின்போது பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன

பிந்தைய வேதகாலம் (கி.மு.1000 – கி.மு.600)

 • பிந்தைய வேதகாலத்தில் ஆரியர்கள் மேலும் கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்தனர். கங்கை சமவெளியில் ஆரியர்கள் தங்களது இருப்பிடத்தை விரிவு படுத்திய விவரங்களை சதபத பிராமணம் குறிப்பிடுகிறது.
 • பிந்தைய வேத இலக்கியங்களில் பல்வேறு ஆரிய குலங்கள் மற்றும் அரசுகள் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. பரந்த அரசுகள்; எழுச்சி பெற்றது இக்காலத்திய சிறப்புக் கூறாகும்.
 • தொடக்கத்தில் குரு மற்றும் பாஞ்சாலம் ஆகிய அரசுகள் புகழ்பெற்று விளங்கின. குரு அரசின் புகழ்மிக்க அரசர்களாகப பரிகூpத், ஜனமேஜயன் ஆகியோர் ஆட்சி புரிந்தனர்.
 • பாஞ்சாலர்களின் சிறந்த அரசர் பிரவாஹன ஜெய்வலி என்பவராவார். புலவர்களை இவர் போற்றினார். குரு, பாஞ்சால அரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, கோசலம், காசி, விதேகம் போன்ற அரசுகள் முக்கியத்துவம் பெற்றன.
 • அஜாதசத்ரு காசியின் புகழ்மிக்க அரசர். முpதிலை நகரை தலைநகராகக் கொண்ட விதேக நாட்டின் அரசர். ஜனகர். யக்ஞவாக்யர் என்ற புலவர் இவரது அவையை அலங்கரித்தார். கிழக்குக் கோடியில் மகதம், அங்கம், வங்கம் போன்ற அரசுகள் இருந்தன.
 • பிந்தைய வேத இலக்கியங்களில் இந்தியா மூன்று பெரும்பிரிவுகளாக குறிக்கப்பட்டுள்ளன. ஆரியவர்த்தம் (வட இந்தியா), மத்யதேசம் (மத்திய இந்தியா), தட்சிணபாதம் (தென்னிந்தியா).

அரசியல் நிலை

 • பிந்தைய வேத காலத்தில் பெரிய அரசுகள் தோன்றியதை ஏற்கனவே குறிப்பிட்டோம். இக்காலத்தில் பல குலங்கள் அல்லது ‘ஜன’ங்கள் ஒன்றிணைந்து ‘ஜனபதங்கள்’ உருவாயின.
 • அரசின் பரப்பளவு பெருகியதால் அரசரின் அதிகாரமும் அதிகரித்தது. தனது வலிமையைப் பெருக்கும் நோக்கத்துடன் அரசர் பல்வேறு சடங்குகளையும்,வேள்விகளையும் செய்தார்.
 • ராஜசூயம் (முடிசுட்டு விழா), அஸ்வமேதம் (குதிரை வேள்வி) மற்றும் வாஜபேயம் (தேர்ப் போட்டி) ஆகியனவும் இவற்றுள் அடங்கும். ராஜ விஸ்வஜனன், அகில புவனபதி, ஏகரதன், சாம்ராட் போன்ற பட்டங்களையும் அரசன் சூட்டிக் கொண்டான்.
 • புரோகிதர், சேனானி, கிராமணி தவிர பிந்தைய வேத காலத்தில் மேலும் பல புதிய அதிகாரிகள் ஆட்சித் துறையில் பங்கு வகித்தனர். கருவூல அதிகாரி, வரிதண்டுவோர், அரச தூதர் ஆகியோரும் இதிலடங்கும்.
 • கிராம சபைகள் உள்ளாட்சி அமைப்புகளில் அங்கம் வகித்தன. பிந்தைய வேத காலத்தில் ‘சபா’, ‘சமிதி’ என்ற அவைகள் செல்வாக்கிழந்தன.

பொருளாதார நிலை

 • இக்காலத்தில் இரும்பின் உபயோகம் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் மக்கள் மேலும் பல வனங்களை அழித்து விளைநிலங்களைப் பெருக்கினர்.
 • வேளாண்மை முக்கியத் தொழிலாக விளங்கியது. புதிய வகை கருவிகள் வேளாண்மைக்கு பயன்படுத்தப்பட்டன. பார்லி தவிர, நெல் மற்றும் கோதுமை பயிரிடப்பட்டன.
 • நிலத்துக்கு உரமிடுதல் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். பல்வேறு தொழில்களும் வளர்ச்சியடைந்தன. உலோக வேலைப்பாடுகள், தோல்பொருட்கள், தச்சுத் தொழில், மட்பாண்டங்கள் போன்றவை பெரும் வளர்ச்சியடைந்தன.
 • உள்நாட்டு வாணிபத்தோடு அயல்நாட்டு வாணிபமும் பெருகின. கடல் வாணிபம் பிந்தைய வேதகாலத்தில் வழக்கிலிருந்தது. பாபிலோனியா போன்ற நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது.
 • வாணியர் என்ற சமூக அமைப்பும் இக்காலத்தில் தோன்றியது. வைசியரும் வாணிகத்தில் ஈடுப்பட்டனர். கணங்கள்’ எனப்பட்ட வாணிகக் குழுக்களை அவர்கள் அமைத்துக் கொண்டனர்.
 • ரிக்வேத காலத்திலிருந்த ‘நிஷ்கம்’ என்ற நாணயம் தவிர, சதமானம், கிருஷ்ணலம் என்றழைக்கப்பட்ட தங்க, வெள்ளி நாணயங்களும் செலாவணியாக புழக்கத்திலிருந்தன.

சமூக வாழ்க்கை

 • பிந்தைய வேத காலத்தில் சமூகத்தின் நான்கு முக்கிய பிரிவுகளான பிராமணர்கள், ஷத்திரியர்கள் வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியன நன்கு வேரூன்றியது.
 • வைசியருக்கும் சூத்திரருக்கும் மறுக்கப்பட்ட பல்வேறு சலுகைகளை பிராமணர்களும் ஷத்திரியர்களும் அனுபவித்து வந்தனர்.
 • ஷத்திரியரைவிட பிராமணரே உயர்ந்த நிலையில் இருந்தபோதிலும் சில வேளைகளில் ஷத்திரியர்கள் பிராமணரே உயர்ந்த நிலையில் இருந்தபோதிலும் சில வேளைகளில் ஷத்தியர்கள் பிராமணர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் கூறிக்கொண்டனர்.
 • தாங்கள் மேற்கொண்ட தொழிலின் அடிப்படையில் பல்வேறு கிளை ஜாதிகளும் இக்காலத்தில் தோன்றின. குடும்பத்தைப் பொறுத்தவரை பிந்தைய வேதகாலத்தில் தாயைவிட தகப்பனின் செல்வாக்கு உயரத் தொடங்கியது.
 • மகளிர் நிலையில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. ஆண்களுக்கு கீழ்ப்படிந்தவர்களாகவே பெண்கள் கருதப்பட்டனர்.அவைகளில் பங்கெடுத்துக் கொள்ளுதல் போன்ற அரசியல் உரிமைகளையும் கூட பெண்கள் இழந்தனர். சிறார் மணம் பரவலாக வழக்கத்திலிருந்தது.
 • அய்த்ரேய பிராமணம் என்ற நூல், பெண் குழந்தை குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம் என்று குறிப்பிடுகிறது. அரச குடும்பத்தில் மட்டும் பெண்கள் ஒருசில சலுகைகளைப் பெற்று வாழ்ந்தனர்.

சமயம்

 • முந்தைய வேதகாலக் கடவுளரான இந்திரனும், அக்னியும் பிந்தைய வேத காலத்தில் செல்வாக்கிழந்தனர்.
 • பிந்தைய வேதகாலத்தில் பிரஜாபதி (படைப்புக் கடவுள்), விஷ்ணு (காக்கும் கடவுள்), ருத்ரன் (அழிக்கும் கடவுள்) ஆகிய கடவுளர் முக்கியத்துவம் பெற்றனர். வேள்விகள் மேலும் தீவிரமாக பின்பற்றப்பட்டதோடு, பல்வேறு சடங்குகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
 • வழிபாட்டின் முக்கியத்துவம் குறைந்து வேள்விகளுக்கு அதிக முக்கித்துவம் வழங்கப்பட்டது. பூசாரித் தொழில் நன்கு முறைப்படுத்தப்பட்டதோடு பரம்பரைத் தொழிலாகவும் மாறியது.
 • வேள்விகளுக்கான ஒழுங்குமுறைகள் அவர்களால் ஏற்படுத்தப்பட்டன. எனவே பிந்தைய வேத காலத்தின் இறுதிப் பகுதியில் பூசாரிகளின் ஆதிக்கத்துக்கும், வேள்விகள் மற்றும் சடங்குகளுக்கும் பலத்த எதிர்ப்புகள் தோன்றின.
 • இத்தகைய வேள்விகளுக்கு எதிராக தோன்றியதே புத்த, சமண சமயங்களாகும். இந்து தத்துவத்தின் சாரமாக விளங்கும் உபநிடதங்கள் பயனில்லாத இத்தகைய வேள்விகளை ஆதரிக்கவில்லை.
 • ஞானம் என்ற உண்மையான அறிவைப் பெறுவதன் மூலமே மோட்சத்தை அடையமுடியும் என அவை வலியுறுத்தின.

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!