17 வயதிலேயே கர்ப்பமான நடிகை அனிகா சுரேந்தர்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
17 வயதிலேயே கர்ப்பமான நடிகை அனிகா சுரேந்தர்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
17 வயதிலேயே கர்ப்பமான நடிகை அனிகா சுரேந்தர்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
17 வயதிலேயே கர்ப்பமான நடிகை அனிகா சுரேந்தர்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

விஜய்யின் உறவினரான பிரிட்டோ, விஜய்யை வைத்து எடுத்த மாஸ்டர் படம் தான் கடந்த ஆண்டில் அதிக வசூலை பெற்ற முதல் படமாக இருந்து வருகிறது. பிரிட்டோ, மாஸ்டர் படத்தை தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் “வாசுவின் கர்ப்பிணிகள்” என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ளார், இந்த திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ரசிகர்கள் ஷாக்:

“வாசுவின் கர்ப்பிணிகள்” இயக்குனர் மணி நாகராஜ் இயக்கத்தில் கோபிநாத் (நீயா நானா), அனிகா, வனிதா விஜயகுமார், சீதா, கிரிஷிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை மாஸ்டர் பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ தயாரிக்க, இசையமைப்பாளர் அவின் மோகன் சித்தரா இசையமைத்துள்ளார். மேலும் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘ஜக்காரியாயுடே கர்ப்பிணிகள்’ என்ற படத்தின் ரீ-மேக் ஆகும். இது நான்கு விதமான கர்ப்பிணி பெண்களை சந்திக்கும் ஒரு மருத்துவரின் கதை ஆகும். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

திடீரென கோபமான ஆலியா மானசா – காரணம் என்ன தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

நடிகர் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சேவியர் பிரிட்டோ. மாஸ்டர் படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது. நடிகர் விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின் பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். அதில் ஒரு படம் தான் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நடிகை அனிகா, 17 வயதிலேயே கர்ப்பணிப் பெண்ணாக நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

Exams Daily Mobile App Download

நடிகை அனிகா சுரேந்திரன் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். மேலும் தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார். அதையடுத்து நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 17 வயதாகும் அனிகா சுரேந்திரன் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அதை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து 17 வயதில் கர்ப்பமா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இப்படம் ரிலீசாகும் போது சர்ச்சையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர் கோபிநாத் மருத்துவராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!