மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணனை கலாய்த்த வனிதா – பிக் பாஸ் சீசன் 5 அப்டேட்!

0
மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணனை கலாய்த்த வனிதா - பிக் பாஸ் சீசன் 5 அப்டேட்!
மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணனை கலாய்த்த வனிதா - பிக் பாஸ் சீசன் 5 அப்டேட்!
மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணனை கலாய்த்த வனிதா – பிக் பாஸ் சீசன் 5 அப்டேட்!

தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் பிக் பாஸில் கலந்து கொள்வது குறித்து கேலியாக பேசியுள்ளார்.

பிக் பாஸ்:

முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனமாக இருந்து வருகிறது விஜய் டிவி. இதில் பல்வேறு சீரியல்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு மூன்று என அடுத்தடுத்து சீசன்களாக சென்று கொண்டுள்ளது. 4 சீசன்களை தொடர்ந்து 5வது சீசன் எப்போது என ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் லோகோ மற்றும் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

465 ரூபாயில் ஆல் இன் ஒன் ஆஃபர் – Airtel Black புதிய திட்டம்!

அதனை தொடர்ந்து போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு நாளுக்கு நாள் வெளியாகி வருகிறது. ஜீ தமிழ் டிவி பிரபலமான லட்சுமி ராமகிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து சர்ச்சைக்கு சொந்தக்காரரான வனிதா அவர்களிடம் நிருபர் கேட்டதற்கு நக்கலாக கலாய்த்துள்ளார் வனிதா. வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆன சமயத்தில் பிரபலங்கள் பலர் இது குறித்து தங்களது கருத்தை தெரிவித்தார்.

தனது திருமண விஷயத்தில் தலையிட்டதால் லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் பேட்டியில் வாடி போடி என்று பேசி சண்டை போட்டார் வனிதா. அதனை தொடர்ந்து தன்னை அவதூறாக பேசி விட்டார் என்று வனிதா மீது லட்சுமி ராமகிருஷ்ணன் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.அதே போல தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்து தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதாவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

தமிழக அரசு பள்ளிகளில் செப்.30 வரை மாணவர் சேர்க்கை – கல்வித்துறை அனுமதி!

இது போன்ற கருத்து வேறுபாடு இருந்து வரும் வேலையில் நிருபரின் கேள்விக்கு அந்த அம்மா பெரிய பணக்காரி, அவங்களுக்கு இதெல்லாம் தேவையில்லை என்று கலாய்த்துள்ளார் வனிதா. அதே சமயம் பிக் பாஸில் தான் கலந்து கொள்ளவில்லை என்று லட்சுமி ராமகிருஷ்ணன் ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!