465 ரூபாயில் ஆல் இன் ஒன் ஆஃபர் – Airtel Black புதிய திட்டம்!

0
465 ரூபாயில் ஆல் இன் ஒன் ஆஃபர் - Airtel Black புதிய திட்டம்!
465 ரூபாயில் ஆல் இன் ஒன் ஆஃபர் - Airtel Black புதிய திட்டம்!
465 ரூபாயில் ஆல் இன் ஒன் ஆஃபர் – Airtel Black புதிய திட்டம்!

ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அத்திட்டத்தின் மூலம் அனைத்து கட்டணங்களையும் ஒன்றாக நிர்வகிக்க வாய்ப்பு உள்ளது.

Airtel Black:

நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், புதிய வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறைந்த விலையில், அதிக பலன்களை தரும் திட்டங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக பிரபலமாக மாறி வருகிறது. தொடர்ந்து வழக்கமான விலையில், கூடுதல் பலன்களை அளித்தும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழுத்து வருகிறது.

தமிழக அரசு பள்ளிகளில் செப்.30 வரை மாணவர் சேர்க்கை – கல்வித்துறை அனுமதி!

அந்த வகையில், ஏர்டெல் நிறுவனம் தற்போது ஏர்டெல் பிளாக் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் ஃபைபர், டிடிஎச் மற்றும் மொபைல் சேவை போன்ற அனைத்து சேவைகளின் கட்டணத்தையும் ஒன்றாக இணைக்கலாம். இதன் மூலம், பயனர்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு இணைப்புகளின் உறுப்பினர்களைப் பெற முடியும். போஸ்ட்பெய்ட் இணைப்பை வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும்.

ஏர்டெல் பிளாக் பயனர்களுக்கு ஒரே நேரத்தில் பல பில் செலுத்தும் தேதிகளை நிர்வகிக்கவும் வாடிக்கையாளர் சேவை IVR க்கு செல்லவும் அல்லது வெவ்வேறு சேவை வழங்குநர்களை தொடர்பு கொள்ளவும் உதவுகிறது. 60 வினாடிகளுக்குள் வாடிக்கையாளர் சேவை வழங்குநர்களுடன் இணைக்க நிறுவனம் உறுதி அளித்துள்ளது. ஏர்டெல் பிளாக் திட்டத்தில் ரூ.465 க்கான DTH ஒரு மாதத்திற்கு இலவசமாக சந்தா கிடைக்கிறது. மேலும், புதிய சேவைகள் அனைத்திற்கும் 30 நாட்கள் இலவச சந்தா வழங்கப்படும்.

எவ்வித ஆவணமும் இல்லாமல் ஆதார் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

ஏர்டெல்லின் வலைத்தளத்தில் உங்களது மொபைல் எண் மற்றும் ஈமெயில் ஐடியை உள்ளிட்டு நீங்கள் இதற்கு தகுதியானவரா இல்லையா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். ஏர்டெல் பிளாக் சேவைக்காக 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஏர்டெல் சேவை ஃபைபர், டிடிஎச், மொபைலை ஒன்றாக இணைக்க முடியும். வாழ்நாள் முழுவதுக்குமான இந்த சேவைகளுக்கு எந்த வித சேவை கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!