வலிமை அப்டேட் – நடிகர் அஜித் உடன் ரஷ்ய ஸ்டண்ட் இயக்குநர்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!!

0
வலிமை அப்டேட் - நடிகர் அஜித் உடன் ரஷ்ய ஸ்டண்ட் இயக்குநர்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!!
வலிமை அப்டேட் - நடிகர் அஜித் உடன் ரஷ்ய ஸ்டண்ட் இயக்குநர்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!!
வலிமை அப்டேட் – நடிகர் அஜித் உடன் ரஷ்ய ஸ்டண்ட் இயக்குநர்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார், தற்போது போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ரஸ்யாவில் நடைபெற்ற நிலையில், புதிய புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

வலிமை அப்டேட்

தமிழ் திரைப்பட உலகில் தனக்கொரு தனி இடம் பிடித்தவர் நடிகர் அஜித் குமார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் அழைப்பார்கள். இவர் தற்போது நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து திடீரென விலகும் வெண்பா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி தல் ரஷ்யாவின் மாஸ்கோவில் தொடங்கிய படப்பிடிப்பில் சண்டை மற்றும் இறுதிக்காட்சிகளை எடுத்துள்ளனர். ஏற்கனவே பைக் ரேஸரான அஜித் தற்போது படத்திற்கான பைக் சாகச காட்சிகளை ரஷ்ய நாட்டின் ஸ்டண்ட் மாஸ்டர்களும் பைக் சாகச வல்லுநர்களையும் வைத்து எடுத்துள்ளனர்.

சின்னத்திரை நடிகர்களான தீபக் & அபி நவ்யா நிச்சயதார்த்தம் – வைரலாகும் புகைப்படங்கள்!!

படப்பிடிப்பு முடிந்த பின்னர் ‘வலிமை’ படத்தில் பணியாற்றிய ரஷ்ய படக்குழுவினர் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் எச்.வினோத், அஜித் ரஷ்ய குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது ட்விட்டர் தலத்தில் ட்ரெண்டாக உள்ளது. படப்பிடிப்பு காட்சிகளில் ரஷ்ய ஸ்டண்ட் இயக்குநர்கள் அந்தரத்தில் பைக்குடன் தொங்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதனால் இந்த படத்திற்கு காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!