“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து திடீரென விலகும் வெண்பா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
"பாரதி கண்ணம்மா" சீரியலில் இருந்து திடீரென விலகும் வெண்பா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து திடீரென விலகும் வெண்பா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

விஜய் டிவி டாப் சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலுக்கு முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் வெண்பா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பரீனா. அவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அந்த சீரியலில் இருந்து அவர் விலகுவாரா என எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியல் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. 8 வருடங்களுக்கு பின்னர் கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தை என்ற உண்மை தெரிய வருகிறது. இது பற்றி கண்ணம்மா கேட்க சௌந்தர்யா இல்லை என பொய் சொல்லி சமாளிக்கிறார். மேலும் வெண்பாவிற்கும், பாரதிக்கும் கல்யாணம் ஆகவில்லை என்ற உண்மையை அஞ்சலி சொல்கிறார். அதனால் ஹேமா தன்னுடைய குழந்தையாக இருப்பாளா என்ற சந்தேகம் கண்ணம்மாவிற்கு வந்துள்ளது.

சின்னத்திரை நடிகர்களான தீபக் & அபி நவ்யா நிச்சயதார்த்தம் – வைரலாகும் புகைப்படங்கள்!!

பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக சேரப் போகும் நேரங்களில் வெண்பா குறுக்கிட்டு அவர்களை பிரிக்கிறார். எனவே இந்த சீரியலின் ஆணி வேராக வெண்பா கதாபாத்திரம் இருக்கிறது. இந்நிலையில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரீனா தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் 7 மாதம் வரை அது பற்றி எந்த அறிவிப்பும் இல்லாமல் நடித்து வந்தார். வயிறு கூட அவருக்கு தெரியவில்லை. இதனால் ரசிகர்களுக்கு சந்தேகம் வராமல் இருந்தது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5ன் அடுத்த வனிதா இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் அவருக்கு இப்போது 8 மாதம் ஆகிறது. விரைவில் இவருக்கு குழந்தை பிறக்க உள்ள நிலையில் இந்த சீரியலில் இருந்து இவர் விலகி விடுவாரா என கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நான் விளக்க மாட்டேன் என ஏற்கனவே அவர் விளக்கமளித்த நிலையில், தற்போது நாட்கள் நெருங்க நெருங்க என்ன நடக்கும் என எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஆனால் தமிழ் சீரியல்களில் சீரியல்களில் நடித்து கொண்டு குழந்தை பெற்றுள்ள நடிகைகள் பலர் உள்ளனர். குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா, காற்றுக்கென்ன வேலி ஸ்ரீதேவி அஷோக் ஆகியோர் குழந்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!