சென்னையில் தடுப்பூசி முன்பதிவிற்கு சிறப்பு இணையதளம் – இன்று முதல் தொடக்கம்!
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள காரணத்தினால் அதனை சரி செய்யும் நோக்கில் முன்பதிவு செய்யும் இணையதள வசதியினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா பரவல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருந்த போதிலும் கொரோனாவை முற்றிலுமாக தவிர்க்க தடுப்பூசி செலுத்துவது மட்டுமே ஒரே வழியாக உள்ளது. இதனால் மாநில அரசு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு? மாணவர்கள் ஏக்கம்!
முதலில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்த கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் கொரோனா பரவல் அதிகமாக ஏற்படுவதாக புகார் வந்துள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பூசி செலுத்த இணையதள வசதியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கோவிட் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்ய https://www.chennaicorporation.gov.in/gcc/covid-details/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் அதனை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.
TN Job “FB
Group” Join Now
மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் புதிய யுக்திகளை கையாண்டு பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை வழங்க சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் சென்னை இன்னோவேஷன் ஹப் (Chennai Innovation Hub) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள வசதி இல்லாதவர்கள் 044-4612 2300 என்ற தொலைபேசி எண்ணிலும், 94999 33644 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தொடர்பு கொண்டு தடுப்பூசி மையங்கள் மற்றும் அதற்கான நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.