தமிழகத்தில் காலியாக உள்ள வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடங்கள் – தேர்வர்கள் குழப்பம்!
தமிழகத்தில் காலியாக உள்ள 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியானது. இருப்பினும் தற்போது வரை பணி நியமனம் செய்யாமல் உள்ளதால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
வட்டாரக் கல்வி அலுவலர்:
தமிழகத்தில் காலியாக உள்ள 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த தேர்வு 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14,15,16 ஆம் தேதிகளில் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இந்த தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இது தேர்வானது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்கள் மூலமாக நடத்தப்பட்டது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி சரிவு – ஒரு சவரன் ரூ.35,760க்கு விற்பனை!
இந்த தேர்வை 42 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் எழுதினர். தொலைதூரத்தில் தேர்வு மையங்கள் இருந்தாலும், தூரத்தை பொறுப்பெடுத்தாமல் இந்த தேர்வை எழுதினர். பல தேர்வர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்படவில்லை. இணைய வழியில் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவுகள் வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் வெளியிடப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக சுமார் 11 மாதங்களுக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் தற்போது வரை சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பணிகள் நிறுத்தப்பட்டாலும் மற்ற தேர்வு வாரியங்கள் அனைத்தும் செயல்பட தொடங்கி விட்டன. இந்நிலையில் தமிழகத்தில் 130க்கும் மேற்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.