UPSC ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு 2023 – நேர்காணல் குறித்த அறிவிப்பு!!

0
UPSC ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு 2023 - நேர்காணல்
UPSC ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு 2023 - நேர்காணல்
UPSC ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு 2023 – நேர்காணல் குறித்த அறிவிப்பு!!

ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் நேர்காணல் நடத்தப்பட இருப்பதாக UPSC அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

நேர்காணல் அறிவிப்பு

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு முடிவுகளை மார்ச் 18 அன்று அறிவித்தது. இந்த தேர்வு முடிவுகளின் அடிப்படையில், தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு 17.04.2023 முதல் 24.05.2023 வரை நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளது. இப்போது, நேர்காணலில் கலந்து கொள்ள இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கான பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

EPFO Stenographer & SSA இல் 2859 காலிப்பணியிடங்கள் – மார்ச் 27 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!!

அதன்படி, விண்ணப்பதாரர்கள் தங்களது ரோல் எண்ணை வைத்து, நேர்காணலுக்கான நேரம், தேதி உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம். நேர்காணலுக்கான காலை அமர்வு 9.00 மணி மற்றும் பிற்பகல் அமர்வு 1.00 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேர்காணல் தொடர்பான மின் அழைப்பு கடிதங்கள் https://www.upsc.gov.in மற்றும் https://www.upsconline.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, நேர்காணலில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு பயணச் செலவு திருப்பி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

OFFICIAL NOTICE

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!