EPFO Stenographer & SSA இல் 2859 காலிப்பணியிடங்கள் – மார்ச் 27 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!!

0
EPFO Stenographer & SSA இல் 2859 காலிப்பணியிடங்கள் - மார்ச் 27 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!!
EPFO Stenographer & SSA இல் 2859 காலிப்பணியிடங்கள் - மார்ச் 27 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!!
EPFO Stenographer & SSA இல் 450+ காலிப்பணியிடங்கள் – மார்ச் 27 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!!

மத்திய அரசுத் துறையான EPFO இல் காலியாக இருக்கும் 2859 Stenographer மற்றும் SSA பணியிடங்களுக்கான விரிவான அறிவிப்பு இன்று (மார்ச் 24) வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு மார்ச் 27 முதல் விண்ணப்பங்களை செலுத்தலாம்.

காலியிடங்கள் அறிவிப்பு

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) காலியாக இருக்கும் சமூக பாதுகாப்பு உதவியாளர் (SSA) மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. இதில், SSA பதவிகளில் கிட்டத்தட்ட 2674 காலியிடங்கள் உள்ளன. இந்த பதவிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் 27 மார்ச் முதல் 26 வரை ஏப்ரல், 2023 வரை http://recruitment.nta.nic.in மற்றும் www.epfindia.gov.in என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பப் பதிவுகளை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மாற்றங்களை செய்வதற்கு ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC RI 2023 தேர்வுக்கான Best Online Classes – இலவச Test Batch உடன்! இன்றே இணையுங்கள்!

மேலும், இப்பதவிகளுக்கான தேர்வு முறை கணினி அடிப்படையிலான தேர்வு (கட்டம்-I) மற்றும் கணினி தட்டச்சு சோதனை (கட்டம்-II) மூலம் நடத்தப்பட இருக்கிறது. தவிர, இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பே மேட்ரிக்ஸில் நிலை-5 படி ரூ.29, 200 முதல் ரூ.92,300 வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஒரு விண்ணப்பதாரர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தவிர ஸ்டெனோகிராபர் (குரூப் சி) பதவியில் காலியாக இருக்கும் 185 பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அதன்படி, விண்ணப்பதாரர்கள் மார்ச் 27 முதல் ஏப்ரல் 26 வரையும் விண்ணப்பங்களை செலுத்தலாம். இதற்கான தேர்வு முறை கணினி அடிப்படையிலான தேர்வாக இருக்கும். இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பே மேட்ரிக்ஸில் நிலை-4 படி ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை ஊதியம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTICE 1

OFFICIAL NOTICE 2

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!