UPSC IES, ISS 2022 தேர்வின் கட்ஆப் மதிப்பெண் வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு!

0
UPSC IES, ISS 2022 தேர்வின் கட்ஆப் மதிப்பெண் வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு!
UPSC IES, ISS 2022 தேர்வின் கட்ஆப் மதிப்பெண் வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு!

இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளியியல் சேவை தேர்வு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) மூலம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது தேர்வின் கட் ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

IES ISS தேர்வு 2022:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளியியல் சேவை பணிகளுக்கான தேர்வுகளை ஜூன் மாதம் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2022ம் ஆண்டிற்கான UPSC IES, ISS தேர்வு குறித்த அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்தியப் பொருளாதாரச் சேவையில் 24 காலியிடங்களும், இந்தியப் புள்ளியியல் சேவையில் 29 காலியிடங்களும் இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

வருடத்தின் இறுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆபரணத்தங்கத்தின் விலை – கவலையில் நகைப்பிரியர்கள்!

இப்பணிகளுக்கான அதிகாரிகள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற இரண்டு படிநிலை தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்வர்கள் இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். தேர்வுகள் ஜூன் 24, 25, 26 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. இதன் இறுதி முடிவுகள் கடந்த 28ம் தேதி வெளியானது. இந்நிலையில், UPSC தேர்வாணையம் தற்போது தேர்வர்களுக்கான பிரிவு வாரியான கட் ஆப் மதிப்பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள், கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையத்தை இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download Cut Off List

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!