UPSC ESE 2022 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – இறுதி முடிவுகள் வெளியீடு!!
UPSC தேர்வு வாரியத்தின் பொறியியல் சேவைகளுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முடிவடைந்த நிலையில் தற்போது இதற்கான இறுதி முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்
UPSC தேர்வு வாரியம் மூலமாக பொறியியல் சேவைகளுக்கான எழுத்து தேர்வு 2022 கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அத்துடன் நேர்காணல் அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வுகளுக்கான இறுதி முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பெற விரும்பும் தேர்வர்கள் upsc.gov.in. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
Follow our Instagram for more Latest Updates
மேலும் இந்த இறுதி முடிவுகளில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆவணங்களை தேர்வாணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து 3 மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். அவ்வாறு மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்ப்பிக்க தவறும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
Exams Daily Mobile App Download
அத்துடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் UPSC ESE 2022 தேர்வின் இறுதி முடிவுகளை பெற விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.