UPSC CBI LDCE 2023 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

0
UPSC CBI LDCE 2023 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு - முழு விவரங்கள் இதோ!

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது CBI (DSP) LDCE 2023 எழுத்து தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தேர்வர்கள் இப்பதிவின் மூலம் எளிமையாக பெற்று கொள்ளலாம்.

நுழைவுச்சீட்டு:

மத்தியப் புலனாய்வுத் துறையில் (CBI) காலியாக உள்ள Deputy Superintendent of Police பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 23 காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 20.12.2023 அன்று UPSC தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் CBI (DSP) LDCE 2023 என்னும் துறை சார்ந்த எழுத்து தேர்வு  மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகைய எழுத்து தேர்வானது வருகின்ற மார்ச் மாதம் 16 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது நேற்று (8.03.2024) வெளியிடப்பட்டுள்ளது.

DRDO TBRL  வேலைவாய்ப்பு 2024 – ரூ.8050/- உதவித்தொகை || தேர்வு கிடையாது!

இந்த நுழைவுச் சீட்டை தேர்வர்கள் https://upsconline.nic.in/ என்ற இணையதள முகவரி மூலம் எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். தேர்வர்கள் இந்த நுழைவுச் சீட்டைப் பெற 08.03.2024 அன்று முதல் 17.03.2024 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வானது Paper I (2 மணி நேரம்), Paper II (03 மணி நேரம்), Paper III (03 மணி நேரம்) என மூன்று பிரிவுகளாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!