SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – UPI PIN பயன்பாடு! மோசடி எச்சரிக்கை!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - UPI PIN பயன்பாடு! மோசடி எச்சரிக்கை!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - UPI PIN பயன்பாடு! மோசடி எச்சரிக்கை!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – UPI PIN பயன்பாடு! மோசடி எச்சரிக்கை!

தற்போது மொபைல் ஆப் மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் போது ஏற்படும் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களை காத்துக்கொள்ள SBI வங்கி சில எச்சரிப்புகளை கொடுத்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

மோசடி எச்சரிக்கை

இன்றைய கால கட்டத்தில் பில் கட்டணம் செலுத்துவது துவங்கி வங்கியில் பணம் பரிமாற்றம் செய்வது வரையிலும் உள்ள பல்வேறு செயல்பாடுகள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வாடிக்கையாளர்களின் சேவையை எளிமையாக்கும் வகையில் முன்னணி வங்கித்துறை நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பணம் பரிமாறிக்கொள்ளும் வசதியை நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா நோய்த்தொற்று காலத்திற்கு பின் இது போன்ற பல சேவைகள் மொபைல் ஆப் மூலம் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

அந்த வகையில் இப்போது வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு கணக்கில் இருந்து வேறு கணக்கிற்கு பணம் அனுப்புவதற்காக G -Pay, patym, phone pe போன்ற செயலிகள் உபயோகத்தில் இருக்கிறது. இந்த செயலிகளை ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மூலம் இயக்க முடியும். ஆனால் இந்த UPI அல்லது நெட் பேங்கிங் சேவைகளின் போது ஏற்படும் சில மோசடிகளால் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை இழக்க நேரிடும். இது போன்ற மோசடிகள் இணைய வங்கி சேவைகளில் அதிகரித்து வருவதால், வாடிக்கையாளர்களுக்கு எச்சரிப்புகளை கொடுக்கும் விதத்தில் வங்கி நிறுவனங்கள் அவ்வப்போது சில அறிவுறுத்தல்களை கொடுத்து வருகிறது.

Post Office வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறு சேமிப்பு திட்டங்களின் தற்போதைய வட்டி விவரம்!

அந்த வகையில் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்க முக்கிய எச்சரிப்புகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து SBI வங்கியின் இணையதளத்தில் ‘பணம் அனுப்பும் போது மட்டும் UPI பின்னை உள்ளிட வேண்டும். ஒவ்வொரு முறையும் நீங்கள் UPI மூலம் பணம் செலுத்தும் போது பாதுகாப்பு குறிப்புகளை நினைவில் கொள்ளுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது மோசடிகளை தவிர்ப்பதற்கு வாடிக்கையாளர்கள் சில அறிவுறுத்தல்களை நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில்,

  • UPI PIN எண்ணை பணத்தை அனுப்பும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். பணத்தை பெறும் போது அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.
  • பணத்தை அனுப்புவதற்கு முன்பாக அந்த நபரின் பெயர், மொபைல் எண், UPI ID போன்றவற்றை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
  • UPI PIN எண்ணை ஒருவருக்கும் பகிரக்கூடாது.
  • ஏதாவதொரு சிக்கலுக்கு தீர்வு காண அதிகாரப்பூர்வ சேவைகளை மட்டுமே அணுக வேண்டும்.
  • ஏதேனும் தவறுகள் நேரிட்டால், செயலியின் ஹெல்ப் சேவைகளை அணுகலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!