சென்னை பல்கலையில் மாணவர் சேர்க்கை – விண்ணப்ப பதிவு துவக்கம்!!

0
சென்னை பல்கலையில் மாணவர் சேர்க்கை - விண்ணப்ப பதிவு துவக்கம்!!
சென்னை பல்கலையில் மாணவர் சேர்க்கை - விண்ணப்ப பதிவு துவக்கம்!!
சென்னை பல்கலையில் மாணவர் சேர்க்கை – விண்ணப்ப பதிவு துவக்கம்!!

சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு இருந்த கல்லூரிகள் கடந்த டிசம்பர் மாத மத்தியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டது. பிப்ரவரி 8ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளையும் திறந்து, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித்துறை உதவித்தொகை அதிகரிப்பு – ஆளுநர் அறிவிப்பு!!

அதில் 2020-21 கல்வியாண்டிற்கான தொலைதூர படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிகளுக்கு உட்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முதுகலை, வணிக நிர்வாகம், முதுகலை டிப்ளோமா உட்பட பட்டபடிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் பதிவு முறை பிப்ரவரி 2ம் தேதி முதல் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு ஜூன் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு – கல்வித்துறை திட்டம்!!

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.online.ideunom.ac.in என்ற பல்கலைக்கழக அதிகாரப்பூரவ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் சென்னை பல்கலைக்கழகத்தின் 115 கற்றல் மையங்கள் வாயிலாகவும் மேற்குறிப்பிடப்பட்ட படிப்புகளில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் மேலும் விபரங்களை பல்கலைக்கழக அதிகாரபூர்வ https://www.unom.ac.in/ இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!