நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஒரே சீருடை? உச்ச நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு!

0
நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஒரே சீருடை? உச்ச நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு!
நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஒரே சீருடை? உச்ச நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பள்ளியை பொறுத்து சீருடையானது மாறுபடுகிறது. இந்த முறை பல ஆண்டுகளாவே இருந்து வருகிறது. அண்மையில் நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சீருடை:

இந்தியாவில் பள்ளி மாணவர்களிடம் பாகுபாட்டை தவிர்க்கும் நோக்கத்துடனும் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையிலும் சீருடை அணியும் முறை கொண்டு வரப்பட்டது. இந்த சீருடைகள் பள்ளிகளை பொறுத்து நிறம் மட்டுமே மாறுபடுகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்புகள் வந்தது. இந்த சம்பவம் ஒரு மத கலவரமாகவே மாறியது குறிப்பிடத்தக்கது. அதே போல கேரளாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சீருடை முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா என்பவர் நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை முறையை பின்பற்ற வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த மனு விசாரணையில் தற்போது முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதாவது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் வரம்புக்கு உட்பட்டதாக இல்லை என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உத்தரவிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக காவல் நிலையங்களில் சூப்பர் நடவடிக்கை – டி.ஜி.பி., சைலேந்திர பாபு அதிரடி!

Exams Daily Mobile App Download

மேலும் இந்த வழக்கில் இனி விசாரிக்க ஒன்றும் இல்லை என கூறி உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் காலநிலை மாறுபடுகிறது. பொதுவாக தென் மாநிலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். அதே சமயம் வட மாநிலங்களில் குறிப்பாக காஷ்மீர், இமாச்சல் பிரதேசம் ஆகிய இடங்களில் குளிர் அதிகமாக இருக்கும். இந்த காலநிலை மாறுபட்டால் இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் ஒரே மாதிரியான சீருடை பின்பற்ற முடியாது என்ற கருத்து நிலவுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!