தமிழகத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம் சரிவு – CMIE நிறுவன ஆய்வில் தகவல்!

0
தமிழகத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம் சரிவு - CMIE நிறுவன ஆய்வில் தகவல்!
தமிழகத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம் சரிவு - CMIE நிறுவன ஆய்வில் தகவல்!
தமிழகத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம் சரிவு – CMIE நிறுவன ஆய்வில் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பலர் வேலைவாய்ப்புகளை இழந்த நிலையில் தற்போது ஜூலை மாதத்தில் 4.8% சதவிகிதாமாக வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வேலைவாய்ப்பின்மை விகிதம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் பல இடங்களில் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் பணி நிறுத்தம் செய்யப்பட்டனர். இதனால் மக்கள் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வேலைவாய்ப்பின்மை அதிகமாகும் நிலை உருவானது.

தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமனம் – அரசுக்கு கோரிக்கை!

தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் பல தொழில் நிறுவனங்களில் புதியவர்களை குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பல தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றி ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தி உள்ளனர். இதனால் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிகம் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்திய பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் நிறுவனமான ‘CMIE’ ஜூலை மாதத்திற்கான வேலைவாய்ப்பின்மை விகித்தை கணக்கீடு செய்துள்ளது. அதில் ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்பின்மை 4.8% சதவிகிதமாக குறைந்துள்ளது. இதுவே கடந்த ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3% சதவிகிதமாக இருந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்தியாவின் ஒட்டுமொத்த மாநிலங்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.17% இல் இருந்து 6.95% ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.30% ஆகவும், கிராமப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.34% ஆகவும் குறைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுகள் காரணமாகவே வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!