Apple iPhone & iPad பயனர்கள் கவனத்திற்கு – CERT-In எச்சரிக்கை!
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பு (CERT-In) ஐபோன் மற்றும் ஐபேட் வாடிக்கையாளர்கள் உடனடியாக iOS 14.7.1 மற்றும் iPad OS 14.7.1 என்ற அப்டேட்டை செயல்படுத்துமாறு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொபைல் அப்டேட்:
பொதுவாக ஒவ்வொரு ஆண்ட்ராய்டு போன் மற்றும் ஐபோன் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது போன்களை அடிக்கடி அப்டேட் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லையென்றால் மொபைல் பயன்பாட்டின் லேட்டஸ்ட் சேவைகளை பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். இதனிடையே மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பான CERT-In ஐபோன் மற்றும் ஐபேட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம் சரிவு – CMIE நிறுவன ஆய்வில் தகவல்!
அதாவது ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை பயன்படுத்துபவர்கள் iOS 14.7.1 மற்றும் iPad OS 14.7.1 வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக இந்த இரு சாதனங்களுக்கும் பிழை திருத்தத்துடன் கூடிய ஒரு அப்டேட்டை கடந்த வாரத்தில் வெளியிட்டது. இந்த அப்டேட் ஆனது பயனர்களுக்கு மெமரி கரப்ஷன் ஐபோன் 6எஸ், ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் 2 மற்றும் 5th Gen ஐபேட், ஐபேட் மினி 4 உள்ளிட்ட மேலும் சில சாதனங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
TN Job “FB
Group” Join Now
அதாவது இந்த அப்டேட்டில் இருக்கும் மெமரி கரப்ஷன் பிழையை பயன்படுத்தி ஐபோன் மற்றும் ஐபேட் போன்ற சாதனங்களை மூன்றாம் நபரால் ஹேக் செய்ய முடியும். இவ்வகை குறைபாடுகள் ஆப்பிள் நிறுவனத்தின் iOS மற்றும் ஐபேட் OS ன் IOMobileFrameBuffer கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிக்கல்கள் தற்போது அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால், இந்தியாவை சேர்ந்த ஆப்பிள் பயனர்கள் செக்யூரிட்டி பேட்ச்சை இன்ஸ்டால் செய்து கொள்ளும் படி CERT-In அறிவுறுத்தியுள்ளது.