அனைத்து மகளிர்களுக்கும் உரிமைத் தொகையா? உதயநிதி வெளியிட்ட குட் நியூஸ் இதோ!

0
அனைத்து மகளிர்களுக்கும் உரிமைத் தொகையா? உதயநிதி வெளியிட்ட குட் நியூஸ் இதோ!

 தமிழக அமைச்சர் உதயநிதி பெண்களுக்கான ரூ.1000 உரிமைத் தொகை குறித்த புதிய அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளார். இதனால் தமிழக பெண்கள் குஷியாக உள்ளார்கள்.

மகளிர் உரிமைத் தொகை:

தமிழக முதல்வரால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த திட்டத்தின் மூலம் தமிழக குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000/- உதவித் தொகையானது அவர்களது வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய திட்டத்தின் பலனை பெற ஆரம்பகட்டத்தில் 1.63 கோடி மகளிர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். இருப்பினும் அதில் 1.5 கோடி பெண்களுக்கு மட்டுமே உரிமைத் தொகையானது வழங்கப்பட்டது.இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தேர்வு செய்யப்பட்ட அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகையானது சரியாக செலுத்தப்பட்டது வந்து.

மத்திய அரசில் Data Analyst காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.65,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

ஆனால் கடந்த சில மாதங்களாக பாதி பெண்களுக்கு மட்டுமே உரிமைத் தொகையானது செலுத்தப்பட்டு வருகிறது மீதமுள்ளவர்களுக்கு நிறுத்தப்பட்டு விட்டது. இப்பிரச்சனை குறித்து திருவண்ணாமலை திமுக வேட்பாளர் அண்ணா துரையை ஆதரித்து இரையூரில் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கேட்டனர். அதற்கு அவர் உரிமைத் தொகை அனைவருக்கும் சென்றடைவதில் ஒரு சில பிரச்சனைகள் உள்ளது அது விரைவில் சரி செய்யப்படும். மேலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த அனைத்து (1.63 கோடி) பெண்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்க வழிவகை செய்து தரப்படும் என கூறினார். இந்த நற்செய்தியை கேட்ட பெண்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியடைந்தனர்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!