தமிழ் உயிரை காப்பாற்றும் மூர்த்தி, ஒன்றாக இணையும் இரு சீரியல் குடும்பங்கள் – மெகா சங்கமம் ப்ரோமோ!

0
தமிழ் உயிரை காப்பாற்றும் மூர்த்தி, ஒன்றாக இணையும் இரு சீரியல் குடும்பங்கள் - மெகா சங்கமம் ப்ரோமோ!
தமிழ் உயிரை காப்பாற்றும் மூர்த்தி, ஒன்றாக இணையும் இரு சீரியல் குடும்பங்கள் - மெகா சங்கமம் ப்ரோமோ!
தமிழ் உயிரை காப்பாற்றும் மூர்த்தி, ஒன்றாக இணையும் இரு சீரியல் குடும்பங்கள் – மெகா சங்கமம் ப்ரோமோ!

விஜய் டிவியின் மெகா சங்கம சிறப்பு எபிசோடில் தமிழை கொல்ல வரும் நபரிடம் இருந்து மூர்த்தி அவரை காப்பாற்ற, கோதை குடும்பத்தினர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தை தங்களது வீட்டில் தங்கிக் கொள்ளுமாறு வருந்தி அழைத்து செல்கின்றனர்.

மெகா சங்கம ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரைம் நேர சீரியல்களான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல்கள் மெகா சங்கமத்தில் இணைந்துள்ளன. இது தொடர்பான சிறப்பு எபிசோடு காட்சிகள் இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் கோவிலுக்கு செல்வதற்காக சென்னைக்கு புறப்பட்டு வருகின்றனர். மறுபக்கத்தில் ‘தமிழும் சரஸ்வதியும்’ குடும்பத்தினர் கார்த்திக், வசுந்தரா திருமணத்தை முடித்து விட்டு வீட்டுக்கு வருகின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகியது இதற்காக தான் – மனம் திறந்த நடிகை ரோஷினி!

இப்படி இருக்க இந்த 2 சீரியல்களின் மெகா சங்கமத்திற்கான ப்ரோமோ ஒன்று தற்சயம் வெளியாகி இருக்கிறது. அதில் தமிழின் வீட்டிற்கு அருகே ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் வேனில் வந்து கொண்டிருக்க வீட்டு வாசலில் நிற்கும் தமிழை ஒருவர் கல்லால் அடிக்க வருகிறார். இதனை பார்க்கும் மூர்த்தி ஒரு கல்லை வைத்து அவரை அடித்து தமிழை காப்பாற்றுகிறார். இப்போது தமிழை காப்பாற்றியதற்காக மூர்த்தி மற்றும் தனத்துக்கு நன்றி சொல்கிறார் கோதை.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை ஜெனிபரின் கர்ப்பகால போட்டோஷூட் – இணையத்தில் வைரல்!

மறுபக்கத்தில் இந்த சண்டையை பார்க்கும் வேன் ட்ரைவர் வண்டியை அங்கிருந்து எடுத்துக்கொண்டு செல்ல இந்த விஷயத்தை மீனா தனத்திடம் வந்து பதட்டமாக கூறுகிறார். இப்போது ஊருக்கு திரும்ப செல்வது எப்படி என மூர்த்தி யோசிக்க, நீங்கள் இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள் என கோதை அவர்களை வருந்தி அழைக்கிறார். இப்போது தமிழ், மூர்த்தியிடம் என்னை தம்பி என்று பாசமாக சொன்னீர்கள். அப்படி என்றால் நீங்களும் எனக்கு அண்ணன் தான் என சொல்ல ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் அவர்களுடன் தங்குவதற்கு ஒப்புக் கொள்கின்றனர். இந்த காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் ப்ரோமோ ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!