விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – TRP ரேட்டிங்கில் முதலிடம்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - TRP ரேட்டிங்கில் முதலிடம்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - TRP ரேட்டிங்கில் முதலிடம்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – TRP ரேட்டிங்கில் முதலிடம்!

ஒவ்வொரு வாரமும் சின்னத்திரை ரசிகர்கள் அதிக அளவில் பார்க்கப்பட்ட சீரியல் எது என்பதை டிஆர்பி ரேட்டிங் மூலம் மதிப்பிட்டு வெளிவிடுவர். அந்த வகையில் கடந்த டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்டில் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்கள் இடம் பெற்றுள்ளது குறித்து இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த வார சீரியல் டிஆர்பி 

வெள்ளித்திரை, சின்னத்திரை என பாகுபாடு இல்லாமல் சினிமா நடிகர்களுக்கு இணையாக சீரியல் நட்சத்திரங்களுக்கும் அதிக வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதுபோல சின்னத்திரையில் எவ்வளவு தான் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் சீரியலை விரும்பி பார்க்கும் பார்வையாளர்கள் தான் அதிகம் உள்ளனர். அதுவும் தமிழ் சீரியலுக்கு என பேர் பெற்ற சேனல் என்றால் அது விஜய் மற்றும் சன் தொலைக்காட்சி தான்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகிய சிவாங்கி? பதிலடி கொடுத்த ரக்ஷன்! ரசிகர்கள் ஷாக்!

இந்த இரு தொலைக்காட்சிகளின் தொடர்கள் தான் ஒவ்வொரு வார டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் போட்டி போட்டு முதலிடத்துக்கு வரும். அந்த வகையில் கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களின் இந்த வார TRP விவரம் இன்று வெளியாகியுள்ளது. அதில் முதல் இடத்தை வழக்கம் போல சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் நடித்து வரும் கயல் தொடர் தான் பெற்றுள்ளது.இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த வாரமும் சன் டிவியின் கயல் தொடரே பிடித்திருக்கிறது.

இதற்கடுத்ததாக இரண்டாம் இடத்தை விஜய் தொலைக்காட்சியில் அப்பாவி மனைவி பாக்கியலட்சுமியை ஏமாற்றி விவாகரத்து செய்து முன்னாள் காதலியுடன் இணைய துடிக்கும் கணவர் கோபி என விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி செல்லும் பாக்கியலட்சுமி தொடர் ஒவ்வொரு வாரமும் தனக்கான இடத்தை விட்டு கொடுக்காமல் முதல் 5 இடத்தை பெற்று வருகிறது. ஓவர் ஆல் ரேட்டிங்கில் இந்த சீரியல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அண்ணன் தங்கை செண்டிமெண்ட் கதைகளுக்கு எப்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ஆடியன்ஸ் பல்ஸை புரிந்துகொண்ட சன் டிவி கொண்டு வந்த தொடர் தான் வானதைப்போல. இத்தகைய புது கதைக்களத்தை கொண்டு ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல சீரியல் தான் அடுத்தபடியான இடத்தை பெற்று ஹிட் கொடுத்து வருகிறது. அடுத்ததாக 800 எபிசோடுகளை கடந்தும் பாரதியும் கண்ணம்மாவும் சேராமல் ஓடிக்கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா. என்னதான் இந்த சீரியலுக்கு அதிக விமர்சனங்கள் வந்தாலும் அதே அளவுக்கு பார்வையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனால் பாரதி கண்ணம்மா அடுத்த கட்ட இடத்திற்கு பெற்று நல்ல வரவேற்பை கொண்டுள்ளது.

Exams Daily Mobile App Download

லாஸ்ட் அண்ட் பெஸ்ட் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு நல்ல கதைக்களத்தை கொண்ட சீரியல் தான் சுந்தரி. இதில் கருப்பாக இருக்கும் பெண் சுந்தரியை, கார்த்திக் ஒதுக்கி வைக்கிறார். அதை எல்லாம் எதிர்த்து போராடி கலெக்டர் ஆக வேண்டும் என்கிற தனது கனவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் கதை தான் இந்த சுந்தரி சீரியல். அப்பேற்பட்ட பெருமை கொண்ட இந்த சன் டிவி தொடர் தான் டாப் லிஸ்டில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!