குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகிய சிவாங்கி? பதிலடி கொடுத்த ரக்ஷன்! ரசிகர்கள் ஷாக்!

0
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகிய சிவாங்கி? பதிலடி கொடுத்த ரக்ஷன்! ரசிகர்கள் ஷாக்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகிய சிவாங்கி? பதிலடி கொடுத்த ரக்ஷன்! ரசிகர்கள் ஷாக்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகிய சிவாங்கி? பதிலடி கொடுத்த ரக்ஷன்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி பொழுதுபோக்கு ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிவாங்கி கடந்த இரண்டு வாரமாக வருகை தராததால் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் ரக்ஷன் அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார்.

குக் வித் கோமாளி சிவாங்கி:

விஜய் டிவியில் ஒவ்வொரு வார சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை தெரியாதவர்களே இல்லை. அந்த அளவிற்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை விரும்பி பார்த்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்துதான் படுத்த படுக்கையாக இருந்த என் அம்மா உயிர் பிழைத்து சுகமாகியுள்ளார் என்று ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி ரசிகர்கள் மனதை சிலிர்க்க வைத்தது. அப்பேற்பட்ட ஷோ மூலமாக பிரபலமானவர் தான் நம்ம வீட்டு செல்லக்குட்டி சிவாங்கி.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – மருத்துவமனையில் மூர்த்தியுடன் தனம் & ஜீவா!

இவர் 2000 ஆம் ஆண்டில் சொந்த ஊராகிய கேரளாவில் இசைக் கலைஞர் கிருஷ்ணகுமார் மற்றும் பின்னணிப் பாடகி பின்னி அவர்களுக்கு முதல் மகளாக பிறந்தவர். இவரது தாய் மொழி மலையாளமாக இருந்தாலும் இவரை புகழின் உச்சிக்கு எடுத்து சென்றது தமிழ் மொழி தான். சிவாங்கியின் பெற்றோர் இருவருமே கலைமாமணி விருது பெற்ற பாடகர்கள் என்பதால் சிவாங்கியும் முதன் முதலில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் சீசன் 7 ல் போட்டியாளராக பங்கேற்றார். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்பது போல நம்ம சிவாங்கி முதல் சுற்றிலேயே மாஸ் காட்டினார்.

பாடல்கள் பாடும் பொழுது இவரது குரல்வளம் பிளஸ் ஆக இருந்தாலும், சாதாரணமாக பேசும் பொழுது அதே குரல்வளம் மைனஸ் ஆகவும் அமைந்தது. அந்த மைனசை ப்ளஸ் ஆக்குவதற்கு கிடைத்த ஒரு வரம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. எந்த குரலை வைத்து மக்கள் கிண்டல் பண்ணினார்களோ அதே குரலை இந்நிகழ்ச்சியில் குழந்தை போல இருக்கிறது என தூக்கி வைத்து கொண்டாடினார்கள். இவ்வாறு இந்த நிகழ்ச்சியில் சிவாங்கிக்கு கிடைத்த பிரபலத்துக்கு அளவே இல்லை.

Exams Daily Mobile App Download

கடந்த 2 சீசன்களிலும் கோமாளியாக வந்து ஹிட் கொடுத்த சிவிங்கி தற்போது சீசன் 3லும் வந்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக சிவாங்கி ஷோவுக்கு வரவில்லை. அதாவது போன வாரம் வராமல் இருந்த சிவாங்கி இந்த வாரம் வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த வாரமும் ஏமாற்றமாகியது. சிவாங்கி வராததற்கு காரணம் அவரது அண்ணனுக்கு திருமணம் நடைபெற உள்ளதால் வரவில்லை என ரக்ஷன் கூறியிருந்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here