தமிழ் சீரியல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்த சன் டிவியின் ‘கயல்’ – பின்தங்கிய ‘பாரதி கண்ணம்மா’!

0
தமிழ் சீரியல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்த சன் டிவியின் 'கயல்' - பின்தங்கிய 'பாரதி கண்ணம்மா'!
தமிழ் சீரியல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்த சன் டிவியின் 'கயல்' - பின்தங்கிய 'பாரதி கண்ணம்மா'!
தமிழ் சீரியல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்த சன் டிவியின் ‘கயல்’ – பின்தங்கிய ‘பாரதி கண்ணம்மா’!

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ஒட்டு மொத்த சீரியல்களிலும் இந்த வார கதைக்களத்துடன் அதிகளவு பார்வையாளர்களை ஈர்த்து சன் டிவியின் ‘கயல்’ சீரியல் டாப் ஒன் இடத்தை பெற்றுள்ளது. அதே நேரத்தில் விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

டிவி சீரியல்

இந்த கால கட்டத்தில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது சீரியல்கள் தான். குறிப்பாக, இந்த காலத்து மக்களுக்கு ஏற்றபடி டிவி சீரியல்களிலும் ரொமான்ஸ், சண்டை போன்ற காட்சிகள் இடம்பெற்று வருவதால் சீரியல்கள் மீதான ஆர்வம் ரசிகர்களிடம் மேலோங்கி இருக்கிறது. அந்த வகையில் தற்போது சீரியல்களுக்கு கிடைக்கும் வரவேற்புகளை தொடர்ந்து வார இறுதி நாட்களிலும் கூட சில சேனல்களில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ஜீவா வெங்கட் எமோஷனல் பதிவு – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இப்போது டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெறுவது இல்லை. ஆனால் விஜய், சன், ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான். பெரும்பாலும் மக்களின் மனம் கவர்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் வெவ்வேறு கதைக்களத்துடன் ஒளிபரப்பான சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்து முதல் 12 இடங்களை பிடித்துள்ள சீரியல்களையும் அதன் TRP ரேட்டிங் குறித்த தகவல்களையும் இப்பதிவில் காணலாம்.

அந்த வகையில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பார்வையாளர்களின் தொடர் மதிப்பீடுகள் அடிப்படையில், சன் டிவியின் ‘கயல்’ சீரியல் 11.21 புள்ளிகளை பெற்று மொத்த தமிழ் சீரியல்களிலும் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து சன் டிவியின் ‘வானத்தை போல’ சீரியல் 10.75 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் ‘சுந்தரி’ சீரியல் 10.43 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளது. TRP ரேட்டிங்கில் இருந்து சில வாரமாக சறுக்கலை சந்தித்து வரும் ‘ரோஜா’ சீரியல் 10.26 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Vijay TV Bigg Boss 5 Promo – தாமரைக்கு சர்பிரைஸ் கொடுத்த கணவர்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

வழக்கமாக முன்னணி இடங்களை பிடித்து வரும் விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இந்த வாரம் 9.49 புள்ளிகளை பெற்று 5வது இடத்தை வகிக்கிறது. தொடர்ந்து சன் டிவியின் ‘கண்ணான கண்ணே’ சீரியல் – 9.26, விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ – 9.14, ‘பாக்கியலட்சுமி’ – 9.12, சன் டிவியின் ‘அபியும் நானும்’ – 8.47, விஜய் டிவியின் ‘ராஜா ராணி2’ – 8.04, சன் டிவியின் ‘அன்பே வா’ – 7.21, விஜய் டிவியின் ‘தமிழும் சரஸ்வதியும்’ – 6.58 போன்ற சீரியல்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!