Vijay TV Bigg Boss 5 Promo – தாமரைக்கு சர்பிரைஸ் கொடுத்த கணவர்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
Vijay TV Bigg Boss 5 Promo - தாமரைக்கு சர்பிரைஸ் கொடுத்த கணவர்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
Vijay TV Bigg Boss 5 Promo - தாமரைக்கு சர்பிரைஸ் கொடுத்த கணவர்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
Vijay TV Bigg Boss 5 Promo – தாமரைக்கு சர்பிரைஸ் கொடுத்த கணவர்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ப்ரீஸ் டாஸ்கின் ஒரு பகுதியாக போட்டியாளர் தாமரை செல்வியை காண அவரது கணவர் வருகை தந்திருக்கிறார். இது தொடர்பாக ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பிக்பாஸ் ப்ரோமோ

விரைவில் முடிவுக்கு வர இருக்கும் விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் இந்த ப்ரீஸ் டாஸ்க் ஒளிபரப்பாகும் போது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஏற்படும் சில நெகிழ்ச்சியான தருணங்கள் பார்வையாளர்களை கவருவது வழக்கம். அந்த வகையில் இந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ப்ரீஸ் டாஸ்க் சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

நெருங்கிய தோழி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே சித்துவை நினைவு கூர்ந்த சரண்யா – ரசிகர்கள் உருக்கம்!

ஒவ்வொரு டாஸ்கிலும் கடுமையான போட்டி, சண்டையின் காணப்பட்டு வரும் பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த வாரம் மிகவும் பொறுமையாகவும், உற்சாகமாகவும் இந்த ப்ரீஸ் டாஸ்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று பிக்பாஸ் போட்டியாளர் தாமரை செல்வியை காண்பதற்காக அவரது குடும்பத்தார் வருகை தந்துள்ளனர். அதன் படி, முதலாவதாக பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த தாமரையின் மகன் அம்மா என்று ஓடி வந்து அவரை கட்டியணைத்து கொள்ளும் வகையில் முதல் ப்ரோமோ வெளியானது.

பிரசவத்திற்கு பின் ‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினாவின் புதிய தோற்றம் – வைரலாகும் புகைப்படம்!

இதனை தொடர்ந்து தற்போது தாமரை செல்வியின் கணவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் சர்பிரைஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியான 2வது ப்ரோமோவில், தனது கணவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதை பார்த்த தாமரை ஓடி சென்று அவரை கட்டிக்கொள்கிறார். பிறகு பிக்பாஸ் போட்டியாளர்களிடம் உரையாடும் அவர், தாமரையின் மகன் கொண்டு வந்த பூவை அவரது தலையில் வைத்து விடுகிறார். இதை கண்டு மற்ற போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகமடைவதை போல வெளியான ப்ரோமோ பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!