விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ஜீவா வெங்கட் எமோஷனல் பதிவு – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் ஜீவா வெங்கட் எமோஷனல் பதிவு - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ஜீவா வெங்கட் எமோஷனல் பதிவு – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் அவரது ரசிகை ஒருவரின் பதிவு ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார்.

நடிகர் வெங்கட்:

தமிழ் சின்னத்திரையில் குடும்ப சீரியல்களுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் கூட்டு குடும்பத்தின் கதையை மையமாக கொண்ட சீரியல் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல். ஆரம்பம் முதலே நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், காவ்யா, ஹேமா, சரவண விக்ரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இரண்டாவது அண்ணன் ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் அவர்களை பல சீரியல்களில் பாத்திருக்க முடியும்.

Vijay TV Bigg Boss 5 Promo – தாமரைக்கு சர்பிரைஸ் கொடுத்த கணவர்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ஆனால் அவருக்கு நல்ல புகழை கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். அவர் சன் டிவியில் ரோஜா சீரியலில் நடித்து வந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரி இல்லாததால் அந்த சீரியலில் இருந்து விலகி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மட்டும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் தீவிர ரசிகை ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் உங்களை பார்த்த முதல் நாளே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது அண்ணா. உங்களது சிரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது. நீங்க சிறந்த நடிகர், அது மட்டுமில்லாமல் நீங்க நல்ல மனிதர். உங்களை சீக்கிரமாக வெள்ளித்திரையில் பார்க்க வேண்டும். நீங்க அதற்கு தகுதியானவர், நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கீங்க. எல்லாருக்கும் நீங்க எடுத்துக்காட்டாக இருக்கீங்க. இந்த இடத்திற்கு நீங்க வர காரணம் உங்களுடைய பொறுமை, தன்னம்பிக்கை தான் யார் உங்களை பற்றி என்ன சொன்னாலும் பரவாயில்லை நாங்க உங்களுடன் இருக்கோம்.

நெருங்கிய தோழி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே சித்துவை நினைவு கூர்ந்த சரண்யா – ரசிகர்கள் உருக்கம்!

உங்களிடம் பல திறமைகள் இருக்கிறது நன்றாக நடிக்கிறீர்கள் ஆடுறீங்க, பாடுறீங்க இதெல்லாம் எங்களுக்காக தான, ரொம்ப நன்றி நீங்க இன்னும் நிறைய செய்ய வேண்டும் தயவு செய்து உங்களுடைய உடல்நிலையை பார்த்துக் கொள்ள வேண்டும் இப்படிக்கு உங்க ரசிகை என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். வெங்கட் தனக்கு இப்படி ஒரு ரசிகை இருப்பதை நினைத்து சந்தோசமாக பதிவிட்டு அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!