சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாக்டர்’ திரைப்படத்தின் TRP ரேட்டிங் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

0
சன் டிவியில் ஒளிபரப்பான 'டாக்டர்' திரைப்படத்தின் TRP ரேட்டிங் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
சன் டிவியில் ஒளிபரப்பான 'டாக்டர்' திரைப்படத்தின் TRP ரேட்டிங் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாக்டர்’ திரைப்படத்தின் TRP ரேட்டிங் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

திரையரங்குகளில் ஓடி நல்ல வசூல் சாதனை நிகழ்த்திய டாக்டர் திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த திரைப்படத்துக்கான TRP ரேட்டிங் குறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

டாக்டர் திரைப்படம்

பொதுவாக ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் டிவி சேனல்களில் புதிய திரைப்படங்களின் அணி வகுப்பு காணப்படுவது உண்டு. அதுவும் மக்களால் அதிகம் வரவேற்பு பெற்ற திரைப்படம் டிவி சேனலில் ஒளிபரப்பப்பட்டால் அந்த சேனலுக்கு நல்ல வசூல் தான். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபல தனியார் சேனலான சன் டிவியில் ‘டாக்டர்’ திரைப்படம் ஒளிபரப்பானது. ‘கோலமாவு கோகிலா’ என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தின் இயக்குனரான நெல்சன் திலீப்குமாரின் அடுத்த படைப்பு தான் ‘டாக்டர்’ திரைப்படம்.

புதிய கண்ணம்மாவாக மாறும் ‘யாரடி நீ மோஹினி’ வெண்ணிலா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் புது வரவு!

ஒரு கடத்தல் கும்பலுக்கும், குழந்தையை காப்பாற்ற நினைக்கும் டாக்டருக்கும் இடையே நடக்கும் கதை தான் இந்த ‘டாக்டர்’ படத்தின் திரைக்கதையாகும். இதில் டாக்டராக நடிகர் சிவகார்த்திக்கேயன் மற்றும் கடத்தல் கும்பல் தலைவராக நடிகர் வினய் ஆகியோருடன் நடிகை பிரியங்கா மோகன், யோகி பாபு, விஜே அர்ச்சனா ஆகியோர் நடித்திருந்தனர். ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருந்த இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சுமார் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை நிகழ்த்தி இருந்தது.

அம்மாவாகும் “பாரதி கண்ணம்மா” வெண்பா, சீரியலில் இருந்து விலகல்? ரசிகர்கள் ஷாக்!

இதை தொடர்ந்து டாக்டர் திரைப்படத்தின் சேட்லைட் உரிமத்தை பெற்றிருந்த சன் டிவி கடந்த தீபாவளியன்று இத்திரைப்படத்தை ஒளிபரப்பு செய்தது. ஏற்கனவே நல்ல வசூல் சாதனை நிகழ்த்தி இருந்த டாக்டர் திரைப்படம் TRP ரேட்டிங்கில் முன்னணி இடத்தை வகித்திற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தை மொத்தமே 16.82 % பேர் பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ‘டாக்டர்’ திரைப்படத்தை 1.3 கோடி பேர் மட்டுமே பார்த்துள்ளனர். இதற்கு மாறாக ‘விஸ்வாசம்’ திரைப்படத்தை 1.8 கோடி பார்வையாளர்கள் கண்டு களித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!