தமிழகத்தில் பள்ளிகளில் இல்லம்‌ தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கான பயிற்சி – தகவல் வெளியீடு!

0
தமிழகத்தில் பள்ளிகளில் இல்லம்‌ தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கான பயிற்சி - தகவல் வெளியீடு!
தமிழகத்தில் பள்ளிகளில் இல்லம்‌ தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கான பயிற்சி - தகவல் வெளியீடு!
தமிழகத்தில் பள்ளிகளில் இல்லம்‌ தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கான பயிற்சி – தகவல் வெளியீடு!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி இயக்ககம் சார்பில் இல்லம்‌ தேடிக்‌ கல்வி மைய தன்னார்வலர்களுக்கான 2 நாள்‌ பயிற்சிக்கான வழிகாட்டுதல்கள்‌ குறித்த அறிக்கை ஒன்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தன்னார்வலர்களுக்கான பயிற்சி

கொரோனா பரவல் காரணமாக 1 முதல்‌ 8 வகுப்புகள்‌ வரை அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கற்றல்‌ இடைவெளி, இழப்பினை ஈடுசெய்வதற்காகத்‌ தன்னார்வலர்களைக்‌ கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம்‌ குறைதீர்‌ கற்றல்‌ செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள்‌ கற்றல்‌ திறனை மேம்படுத்தும்‌ வகையில்‌ இல்லம்‌ தேடிக்‌ கல்வி மையங்கள்‌ 38 மாவட்டங்களிலும்‌ செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இல்லம்‌ தேடிக்‌ கல்வி மைய தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும்‌ விதமாக , குழந்தைகளை கையாள வேண்டிய விதம்‌ மற்றும்‌ கற்றல்‌ கற்பித்தல்‌ குறித்தும்‌ இரு நாட்கள்‌ பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக 7வது ஊதியக்குழு அடிப்படையில் ஊதிய உயர்வு? அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு!

இப்பயிற்சியானது குறுவளமைய பயிற்சியாக 1முதல் 5ம் வகுப்புகளை கையாளும்‌ தன்னார்வலர்களுக்கு ஒரு பிரிவாகவும்‌, 6 முதல் 8 ஆம் வகுப்புகளை கையாளும்‌ தன்னார்வலர்களுக்கு மற்றொரு பிரிவாகவும்‌ வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கான கருத்தாளர்களுக்கு மாநில அளவில்‌ மற்றும்‌ மாவட்ட அளவில்‌ கீழ்காணுமாறு பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி கூட்டமானது முன்திட்டமிடல்‌ கூட்டம்‌ 24.08.2022 தேதியும், இரண்டாம்கட்டம்‌ 25.08.2022 & 26.08.2022 ஆகிய 2 நாட்களும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுவளமைய பயிற்சியில்‌ கலந்துக்‌ கொள்ள இயலாத தன்னார்வலர்களுக்கு வட்டார அளவில்‌ ஒருவாரத்திற்குள்‌ பயிற்சி அளிக்க வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிகளில்‌ அனைத்து தன்னார்வலர்களும்‌ பங்குபெறும்‌ விதமாக பயிற்சிக்கான தேதி, இடம்‌ ஆகியவைக்‌ குறித்து பள்ளிகள்‌ மூலம்‌ முன்னரே தெரிவிக்க வேண்டும்‌. மேலும்‌ தன்னார்வலர்‌ பயிற்சியின்‌ போது அவர்களுக்கான நான்காம்‌ கட்ட ( தொடக்கநிலை, உயர்‌ தொடக்கநிலை) கையேடு மற்றும்‌ மையங்களுக்கான சுவரொட்டி மற்றும்‌ அட்டைகள்‌ பள்ளிகள்‌ மூலம் வழங்கப்பட வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here