விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் சன் டிவி “ரோஜா” சீரியல் வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" முதல் சன் டிவி "ரோஜா" சீரியல் வரை - ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் சன் டிவி “ரோஜா” சீரியல் வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!!

தமிழ் சின்னத்திரை சீரியல்களை விட அன்றைய எபிசோட் குறித்து வெளியாகும் ப்ரோமோக்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. ரசிகர்கள் ப்ரோமோவை பார்த்து செய்யும் கமெண்ட்கள் ரசிக்கும் தன்மையுடன் இருக்கிறது. தற்போது வைரலாகும் ப்ரோமோக்களில் உள்ள சிறந்த கமெண்ட்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

டாப் கமெண்ட்ஸ்:

வெள்ளி திரை படங்களை போல சின்னத்திரை சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு புதிய சீரியல்களையும், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்களையும் கொண்டு வந்துள்ளன. அந்தந்த சீரியல் எபிசோட்களை விட தினமும் நடைபெற உள்ள டிவிஸ்ட்கள் குறித்த ப்ரோமோ தான் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ரசிகர்கள் செய்யும் கமெண்ட்களும் காமெடி கலந்தது போல உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யா குடும்பத்துடன் சேர்த்து வைக்கிறேன் என மூர்த்தி வீட்டு எதிரில் வீடு பார்க்கிறார் கஸ்தூரி. மேலும் பால் காய்ச்சி மூர்த்திக்கு கொண்டுபோய் ஐஸ்வர்யா கொடுக்கிறார். அப்போது கயல் பாப்பாவை ஐஷு கொஞ்சுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சூப்பர் இப்படியோ சொதப்பாம கொண்டுபோங்க என்று கூறியுள்ளார்.

சீரியலில் களமிறங்கும் ‘சூப்பர் சிங்கர்’ செந்தில், ராஜலட்சுமி ஜோடி – ரசிகர்கள் உற்சாகம்!

மற்றொரு ரசிகர் உன்னை பார்த்தா யாருக்கும் புடிக்காது வெளியில போ என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இது ஆரம்பம்தான் இனிமேதான் முழு ஆட்டமும் இருக்கு என்று கூறியுள்ளார். அதில் ஒரு ரசிகர் கஸ்தூரி சுயரூபம் தெரியாம இதுங்க ஆடிகிட்டு இருக்குங்க என்ன நடக்க போகுதோ என்று பதிவிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட செல்ல சௌந்தர்யா தடுக்கிறார். மேலும் ஹேமா தான் உன்னுடைய குழந்தை என சொல்ல, கண்ணம்மா கதறி அழுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சௌந்தர்யா சரியாத்தான் கேக்குறாங்க ஆனா கண்ணம்மா மூஞ்சிய பாத்தா கடுப்பாகுது என்று கூறியுள்ளார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் விவாகரத்துக்கு ரூ.5 கோடி கொடுக்கும் பாரதி – கண்ணம்மா எடுக்கும் முடிவு?

மற்றொரு ரசிகர் வெண்பா தான் மிரட்டுகிறார் என்று உண்மையை சொன்னால் என்ன கண்ணம்மா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் நீங்களே பேசிக்கிட்டு இருந்தா எப்படி அங்க வெண்பா ஆவலோட காத்துக்கிட்டு இருக்கும் போய் டைவர்ஸ் கொடுங்க கண்ணம்மா என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணம்மாவின் முகத்தை பார்க்கவே கடுப்பாகுது என்று கூறியுள்ளனர்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில், பணத்தை இழந்த பாக்கியாவை நோக்கி பணம் கேட்டு பலர் வந்துள்ளனர் கோபி பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எல்லாருக்கும் இந்த மாதிரி மாமனார் கிடைக்க மாட்டாங்க….. பாக்கியலட்சுமிக்கி அவங்க மாமனார் ஆதரவாக இருக்கிறார் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாக்கியாவ திட்டுறதே இந்த கோபிக்கு வேலையா போச்சி இவரோட விஷயம் மட்டும் பாக்கியாவுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான் என ஒரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் நல்ல ஒரு கணவன் இல்லாம இருந்தாலும் நல்ல ஒரு மகன் மற்றும் மாமனார் மாமியார் கிடைச்சா அதுவே போதும் என கூறியுள்ளார்.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில் சரவணனிற்கு புதிதாக வண்டி வாங்கி அதை சந்தியா ஓட்டி வருகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சூப்பர் காமெடி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சந்தியாவை மட்டம் தட்ட சிவகாமிக்கு இன்னொரு விஷயம் கெடச்சிடுச்சி என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் செம காமெடி என்றே பதிவிட்டுள்ளனர்.

ரோஜா

ரோஜா சீரியலில், ரோஜா தான் செண்பகத்தின் மகள் என தெரியாமல் இருக்கிறது. இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரோஜா தான் செண்பகம் பொண்ணு என்று தெரிய வேண்டும் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்போ தான் அண்ணப்பூரணி சரியா பேசுது என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இப்பதான் பாட்டிமா கொஞ்சம் புத்தி வந்திருக்கு என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாட்டிக்கு பாராட்டையே தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!