‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களிலும் இந்த வாரத்துக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில், அதன் மீதான ரசிகர்களின் பார்வை மற்றும் விமர்சனங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.
சீரியல் ப்ரோமோ
வாரந்தோறும் ஏறக்குறைய அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டுமே மக்களின் ஒரே பொழுதுபோக்காக அமைந்துள்ளது. என்றாலும் குறிப்பிட்ட சில சீரியல்கள் மட்டுமே அதிகம் விரும்பக்கூடியதாகவும், மக்களின் மனம் கவர்ந்ததாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் TRP ரேட்டிங்கை வைத்து பார்த்தாலே அதிகளவு பார்வையாளர்களை ஈர்த்துள்ள சீரியல்களை கண்டறியலாம்.
இதில் குறிப்பாக ஒவ்வொரு நாள் வெளியாக இருக்கும் எபிசோடுகளுக்கான ப்ரோமோக்களும் அந்த சீரியலை பார்க்க வைக்கும் படி ரசிகர்களை தூண்டுகிறது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அந்த வகையில் இந்த வாரம் வெளியா ப்ரோமோக்கள் மற்றும் அதற்குரிய ரசிகர்களின் கருத்துக்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். முதலாவதாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ப்ரோமோவுக்கு, இந்த சீரியலும் வழக்கமான சீரியல் பார்மெட்டுக்கு வந்தாச்சு, இனி கூட்டுக் குடும்பம் ரெண்டா உடைய போது என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து மற்றொரு ரசிகர், நல்லா இருக்க குடும்பத்தில் ஒரு ஆள் குழப்பத்தை ஏற்படுத்தினால் தான் அது சீரியலுக்கு அழகு என்று பதிவிட்டுள்ளார். அடுத்ததாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ப்ரமோவுக்கு, வெண்பாவே வந்து உண்மையை சொன்னாலும் பாரதி கேட்கமாட்டார், ஹேமா கண்ணம்மா பொண்ணுனு தெரிஞ்சா பாரதி என்ன செய்வார், எத்தனை எபிசோடு இப்படியே போகும், இந்த பாரதிக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு என கமெண்டுகள் நீள்கிறது. தொடர்ந்து ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபிக்கு ஆதரவாக தான் கதை போகிறது.
‘சாப்பாடு இல்லை, வாடகை கொடுக்க பணம் இல்லை’ இசைவாணி உருக்கம் – ‘பிக்பாஸ்’ 5 ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியாவை இனி அனைவரும் மட்டம் தட்ட ஆரம்பிப்பார்கள், ஒரு பெண் முன்னேறுவது டைரக்டருக்கே பொறுக்கல போல பாக்கியா பாவம் என்று பாக்கியலட்சுமிக்கு ஆதரவுகளை அளித்துள்ளனர். இறுதியாக, ‘ராஜா ராணி 2’ சீரியல் ப்ரோமோவுக்கு இதெல்லாம் ஒரு ப்ரோமோவா, இந்த சீரியலை ஏன் இன்னும் போட்டுட்டு இருக்கீங்க, சீக்கிரமா முடிச்சிட்டு போகலாம், ரொம்ப வொர்ஸ்ட் சீரியல் என கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்துள்ளனர். இந்த மொத்த கமெண்டுகளை வைத்து பார்க்கையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தான் இப்போதைக்கு அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருப்பதாக தெரிகிறது.