‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘ரோஜா’ வரை டாப் சீரியல்களின் இன்றைய ப்ரோமோ – ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் 'ரோஜா' வரை டாப் சீரியல்களின் இன்றைய ப்ரோமோ - ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் 'ரோஜா' வரை டாப் சீரியல்களின் இன்றைய ப்ரோமோ - ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘ரோஜா’ வரை டாப் சீரியல்களின் இன்றைய ப்ரோமோ – ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

தினசரி சீரியலின் 30 வினாடி சுருக்கமாக ஒளிபரப்பாகும் ப்ரோமாவிற்கு ரசிகர்கள் அதிகரித்துள்ள நிலையில், பரபரப்பாக போய் கொண்டிருக்கும் சீரியல்களின் இன்றைய ப்ரோமோ மற்றும் சீரியல்கள் குறித்து ரசிகர்களின் கருத்துக்களை இந்த பதிவில் காண்போம்.

டாப் கமெண்ட்ஸ்:

சின்னத்திரையில் எத்தனை சேனல்கள் இருந்தாலும் சீரியல் ஹிட் ஆகி ரசிகர்கள் மனதை கவர்வது என்னமோ.. விஜய் டிவி மற்றும் சன்டிவி தான். மற்ற சேனல்களின் சீரியல்கள் என்ன தான் தனக்கென ரசிகர்களை இழுத்தாலும் ஹிட் வரிசையின் பின்னால் தான் உள்ளது. தற்போதைய கால கட்டத்தில் அனைத்து வயதினரும் சீரியல் பார்க்க தொடங்கி விட்டனர். இதனால் ப்ரோமோக்கள் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பப்பட்டு வருகிறது. ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் அளித்து வரும் கமெண்டுகளுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

கஸ்தூரி தனம் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை பற்றி பேசிக் கொண்டிருப்பது போல் காட்சிகள் வந்துள்ளது. இதனை பார்த்த ஒருவர் கஸ்தூரி வில்லத்தனம் அதிகமா இருக்கே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தெருவுக்கே கேட்கிற மாதிரி நல்லா கத்தி சொல்லு கண்ணா அப்போதான தெரியும் என்று கூறியுள்ளார்.

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 போட்டியாளர்களிடையே பிளவு, பாவனி வருத்தம் – வெளியான ப்ரோமோ!

மற்றொருவர் கஸ்தூரி டபுள் கேம் சீக்கிரமா கண்டுபிடிங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் என்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் வழக்கமான சீரியல் மோட்-க்கு வந்துடுச்சி என்று கேட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

கண்ணம்மா ஹேமாவை பார்த்து நான் உனக்கு யார்ன்னு தெரியுமா என்று கேட்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சீக்கிரம் அந்த டெஸ்ட் எடுங்க பா அதான் பாதி உண்மை தெரிஞ்சு போய்டுச்சு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த சீன் கண்டிப்பா வெள்ளிகிழமை தான் வரும்.. இவன் இப்டி நம்மள காமிச்சு ஏமாற்றி கிட்டு இருக்கான்.. என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் உலகத்துலயே புடவைக்கு மேட்ச்சா நெய்ல் பாலிஷ் போடற சமையல் அம்மா நம்ம கண்ணம்மா தான் என கூறியுள்ளார்.

பாக்யலட்சுமி:

கோபி பாக்யாவை வீட்டை விட்டு வெளியில் விரட்டும் போது எழில் பணத்துடன் வருகிறார். இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபி மாட்டிக்கொள்ளும் தருணத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். இப்படி ஒரு மகன் கிடைப்பது வரம் விஷால் நடிப்பு ரசிக்க வைக்கிறது யதார்த்த நடிப்பு வாழ்த்துக்கள் என ஒரு ரசிகர் கூறியுள்ளர். மற்றொருவர், அம்மா எப்படி இருந்தாலும் நாம் எழில் மாதிரி ஒரு பையனாக வாழ ஆசையை ஏற்படுத்துகிறது இந்த கதை என கூறியுள்ளார்.

ராஜா ராணி 2:

புது வண்டி வாங்கும் சரவணனுக்கு சந்தியா வண்டி ஓட்ட கற்றுக் கொடுப்பது போல் காட்சிகள் வந்துள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பார்வதிக்கு அடுத்த பிரச்சனை ஸ்டார்ட் ஆகிடுச்சி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வழக்கம்போல இந்த இதற்கு காரணம் சந்தியா தான் என்று சிவகாமிக்கு ஒரு காரணம் கிடைச்சாச்சு என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இந்த பிரச்சனை சீக்கிரம் முடிங்க என்று கூறியுள்ளார்.

ரோஜா:

இன்றைய ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்போ அர்ஜூன் ரோஜா ரொமான்ஸ் இல்ல ஒரு காமெடி இல்லை என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பரபரப்பான திருப்பம்னு சொல்லிட்டு ஒன்னுமே இன்ட்ரஸ்டிங்கா இல்லை என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இப்படியே போன இன்னும் எவ்வளவு நாள்தான் ஓட்டூவீங்க சீக்கிரமா உண்மையை சொல்லுங்க என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!