மக்கள் மனம் கவர்ந்த டாப் 5 சீரியல் கதாபாத்திரங்கள் – “பாரதி கண்ணம்மா” வினுஷா தேவி முதலிடம்!

0
மக்கள் மனம் கவர்ந்த டாப் 5 சீரியல் கதாபாத்திரங்கள் -
மக்கள் மனம் கவர்ந்த டாப் 5 சீரியல் கதாபாத்திரங்கள் - "பாரதி கண்ணம்மா" வினுஷா தேவி முதலிடம்!
மக்கள் மனம் கவர்ந்த டாப் 5 சீரியல் கதாபாத்திரங்கள் – “பாரதி கண்ணம்மா” வினுஷா தேவி முதலிடம்!

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களில் மக்கள் மனம் கவர்ந்த கதாபாத்திரங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் வினுஷா முதலிடத்தில் இருக்கிறார்.

மனம் கவர்ந்த கதாபாத்திரம்:

தொலைக்காட்சி சீரியல்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அங்கமாக மாறிவிட்டது. மக்களின் மனதை புரிந்து கொண்டு பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ஏற்கனவே இருக்கும் சீரியல்களில் கூடுதல் சுவாரஸ்யமும் அதிகரிக்க புதுப்புது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னணி சீரியல்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களிடம் பிரபலமாக இருக்கிறது. இது அவர்கள் கதையுடன் ஒன்றி நடிக்கும் காரணத்தால் தான்.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி சீசன் 3’ ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – இவர் இல்லாமல் ஆரம்பமா?

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் படி தமிழ் சின்னத்திரை சீரியல்களில் மக்களிடம் அதிகம் பேசப்பட்ட கதாபாத்திரம் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் முதலிடத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் வினுஷா இருக்கிறார். வினுஷா தற்போது தான் சீரியலில் புதுமுகமாக அறிமுகமானார். அறிமுகமாகி முதல் சீரியலிலேயே அவர் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அதன் பின் இரண்டாவது இடத்தில் சன் டிவி ரோஜா சீரியல் பிரியங்கா இருக்கிறார்.

சன் டிவி “வானத்தை போல” சீரியலில் இருந்து விலகிய தமன் குமார் – ஸ்வேதாவை தொடர்ந்து அதிரடி முடிவு!

மூன்றாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியா இருக்கிறார். நான்காம் இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தனம் கதாபாத்திரம் இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் சன் டிவி சுந்தரி சீரியல் சுந்தரி கதாபாத்திரம் இருக்கிறது. மேலும் கதாபாத்திரங்கள் இல்லாமல் முதல் இடத்தில் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ப்ரியங்கா இருக்கிறார், மூன்றாவது இடத்தில் குக் வித் கோமாளி புகழ் இருக்கிறார். நான்காவது இடத்தில் ஷிவாங்கி இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் KPY பாலா இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!