பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம் !!!!

0
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம் !!!!
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம் !!!!

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம் !!!!

பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை நடைபெறவுள்ளதாக பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், பிளஸ்-2 தேர்வானது கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெற்றது. இதை சுமார் 8.5 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 1 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

சென்னைக்கு மட்டும் விலக்கு:

48 லட்சம் விடைத்தாள்கள் 200 மையங்களில் நாளை முதல் நடைபெறுகிறது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விடைத்தாள்கள் திருத்தும் பணி இங்கு நடைபெறவில்லை. இங்குள்ள விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட மாட்டர்கள்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ???

பல்வேறு கட்டுப்பாடுகள்

  • கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளி விட்டு பணி செய்தல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • ஆசிரியர்களுக்கு மறுமுறை பயன்படுத்தக்கூடிய 3 முகக்கவசங்கள் வழங்கப்படுகிறது. மையங்களில் ஆசிரியர்கள் ஒன்றாக கூடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • கொரோனா பாதித்த கட்டுப்பாட்டு பகுதியில் ஆசிரியர்கள் இருந்தால், அவர்களுக்கு இந்த பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.
  • விடைத்தாள் திருத்தும் பணி காலை 9 மணிக்கு தொடங்கும். தமிழ், ஆங்கிலம் மொழி பாடங்களுக்கான விடைத்தாள்கள் காலையில் 15, மாலையில் 15 விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும். மற்ற முக்கிய பாடங்கள் காலையில் 10, மாலையில் 10 விடைத்தாள்கள் திருத்தம் செய்வார்கள்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள்

12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்திய பின்னர், 11-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்படும். 15 நாட்களுக்குள் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஜூன் 3-வது வாரத்தில் தேர்வு முடிவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!