
மாதம் ரூ.40,000 ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
தமிழக அரசு பணிகள் குறித்த அறிவிப்புகளை பட்டதாரிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வரும் நிலையில், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Veterinary Graduate பணிக்கான காலியிடம் பற்றிய அறிவிப்புகள் முன்னதாக வெளியிடப்பட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 10ம் தேதி ஆகிய நாளை இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Veterinary Graduate பணி வாய்ப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Veterinary Graduate பணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி 2 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு மாதம் ரூ.40,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Veterinary Graduate பணிக்கு கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை வளர்ப்பில் இளங்கலை பட்டத்தை அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தமிழில் எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி, விண்ணப்பத்தை உரிய முறையில் பூர்த்தி செய்து பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மகளிர் மற்றும் மகப்பேறு துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல் – 637 002 என்ற முகவரியில் நாளை (10.10.2022) நடைபெறும் நேர்காணலில் காலை 10 மணிக்கு கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
NOTIFICATION LINK
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்