
மீனா பெயரில் வீட்டை வாங்கிய ஜனார்த்தனன், வருத்தத்தில் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவின் அப்பா, மூர்த்தி வீட்டை யாரிடமும் சொல்லாமல் மீனா பெயரில் எழுதி கொடுக்கிறார். அதை தெரிந்து கொண்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஜீவா இது பற்றி கேட்க அப்போதும் நான் மீனா பெயரில் தான் வாங்குவேன் என சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், இடத்தை வாங்குபவர் கையெழுத்து போடுங்கள் என சொல்ல மீனாவின் அப்பா மீனாவை கையெழுத்து போட சொல்கிறார். மீனா இடத்தை வாங்குபவர் தான் கையெழுத்து வாங்க வேண்டும் என சொல்ல அதான் உன்னிடம் கொடுக்கிறேன் என மீனாவின் அப்பா சொல்கிறார். அனைவரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர். மீனாவின் அப்பா கையெழுத்து போட சொல்ல மீனாவும் வேற வழி இல்லாமல் கையெழுத்து போடுகிறார். தனம் மூர்த்தி எதுவும் பேச முடியாமல் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
பின் வெளியே வந்து அனைவரும் எதுவும் பேச முடியாமல் இருக்க, ஐஸ்வர்யா இது என்ன ரொம்ப அநியாயமாக இருக்கிறது என கேட்கிறார். வீட்டிற்கு வந்த போது எல்லாம் நான் வாங்கிறேன் என சொல்லிவிட்டு இப்போது மீனா பெயரில் வாங்கிவிட்டார். ஒரு பேச்சிற்கு சொல்ல வேண்டியது தான என கேட்க, தனம் நாம என்ன செய்வது என கேட்கிறார். கண்ணன் ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம், நாம என்ன சொல்ல போறோம் என கேட்க, தனம் பெரியவர்களை அப்படி எல்லாம் பேச கூடாது என சொல்கிறார். ஜீவா நேற்று பத்திரத்தை படிக்கும் போது கூட ஜனார்த்தனன் பெயர் தான் இருந்தது என சொல்கிறார்.
மீனா அக்காவிற்கு தெரியாமல் இருக்குமா என ஐஸ்வர்யா கேட்க தனம் அவளுக்கு தெரிந்து இருந்தால் நம்மிடம் சொல்லி இருப்பாள் என சொல்கிறார். நீங்க தான் அப்படி நினைக்கிறீர்கள் என ஐஸ்வர்யா சொல்ல, ஜீவா நான் அவரிடம் கேட்கிறேன் என சொல்கிறார். தனம் அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். பின் மீனாவின் அப்பா வர மீனா பெயரில் வாங்க போறதை ஏன் சொல்லவில்லை என கேட்கிறார். அதற்கு ஜனார்த்தனன் நான் எல்லாமே மீனா பெயரில் தான் வாங்குவேன் என சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
உடனே எல்லாரும் எதுவும் பேசாமல் இருக்கின்றனர். பின் மூர்த்தி கிளம்பலாம் என சொல்ல, ஆனால் ஜனார்த்தனன் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு போகலாம் என சொல்கிறார். ஆனால் தனம் வீட்டில் சமைத்து வைத்திருப்பதாக சொல்ல, உடனே ஜனார்த்தனன் சாப்பிட்டு தான் போக வேண்டும் என சொல்கிறார். பின் கதிர் முல்லை அமைதியாக நிற்க மூர்த்தி அவர்களிடம் எதுவும் பேசாமல் இருக்கிறார். பின் கதிர் எனக்கு வேலை இருப்பதாக சொல்லிவிட்டு கிளம்புகிறார். குடும்பத்தினர் அனைவரும் கிளம்பி மீனா வீட்டிற்கு செல்ல, மீனாவின் அம்மா கயலை தூக்கிக் கொண்டு உள்ளே செல்கிறார். அனைவரும் வீட்டை விற்ற சோகத்தில் இருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்