தமிழகத்தில் சரிவை கண்ட தங்கம் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் – இன்றைய நிலவரம்!

0
தமிழகத்தில் சரிவை கண்ட தங்கம் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் - இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் சரிவை கண்ட தங்கம் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் - இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் சரிவை கண்ட தங்கம் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் – இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் தங்கம் விலையானது ஒரு நாள் உயர்வையும் ஒரு நாள் சரிவையும் கண்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சரிவை கண்டு கிராம் ரூ. 4925-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை:

தங்கம் என்பது ஒரு ஆடம்பர பொருளாக இல்லாமல் அதனை மக்கள் ஒரு முதலீடாக கருதுகின்றனர். அதனால் தான் தங்கம் விலையில் எவ்வளவு வித்தியாசம் இருந்தாலும் மக்கள் அதனை வாங்க தயங்குவதில்லை. இந்நிலையில் கடந்த மாதம் தங்கம் விலை சரிவை கண்ட நிலையில் அதன் பின் இந்த மாதம் தொடக்கத்தில் தங்கம் விலையானது அதிகரித்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கமானது ரூ. 4951க்கு விற்பனை செய்யப்பட்டது.

TNUSRB SI தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

Exams Daily Mobile App Download

ஆனால் இன்று தங்கம் விலை மீண்டும் ரூ.26 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 4925க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு சவரன் தங்கம் ரூ. 39400க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதே சமயம் வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலையானது ரூ.50 காசுகள் அதிகரித்து ரூ.67.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.500 அதிகரித்து ரூ. 67500க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் நகை வாங்க இது உகந்த நேரம் என்பதால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!