உச்சக்கட்ட அதிர்ச்சி.. ஒரே நாளில் 40,400-ஐ தாண்டிய தங்கம் விலை – ஷாக்கான நகைப்பிரியர்கள்!!

0
உச்சக்கட்ட அதிர்ச்சி.. ஒரே நாளில் 40,400-ஐ தாண்டிய தங்கம் விலை - ஷாக்கான நகைப்பிரியர்கள்!!
உச்சக்கட்ட அதிர்ச்சி.. ஒரே நாளில் 40,400-ஐ தாண்டிய தங்கம் விலை - ஷாக்கான நகைப்பிரியர்கள்!!
உச்சக்கட்ட அதிர்ச்சி.. ஒரே நாளில் 40,400-ஐ தாண்டிய தங்கம் விலை – ஷாக்கான நகைப்பிரியர்கள்!!

தமிழகத்தில் நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை என்றும் இல்லாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்றைய தங்கத்தின் நிலவரம் குறித்து பார்ப்போம்.

தங்கம் விலை

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் மாறி கொண்டே வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் அதிரடியாக ரூ.40 ஆயிரத்தை தொட்டது. இருப்பினும் பொதுமக்களிடம் தங்க நகை வாங்குவதற்கான ஆர்வம் குறைவதில்லை. மேலும் அயல் நாட்டினரும் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்து வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் கடந்த 14ம் தேதி அன்று சவரன் ரூ.40,800 என அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்தது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,045ஆகவும், ஒரு சவரன் ரூ.40,360ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை என்றும் இல்லாத அளவுக்கு அதிரடி உயர்வை கண்டுள்ளது.

வங்கியில் நகை கடன் பெறுபவர்களா நீங்கள்? உங்களுக்கான ஹாப்பி நியூஸ்!! ரூ. 3800 வரை கிடைக்கும்!!

Exams Daily Mobile App Download

அதன்படி இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.11 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,056க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு சவரன் தங்கத்தின் விலை 88 ரூபாய் உயர்ந்து ரூ.40,448க்கு விற்பனையாகிறது. இதையடுத்து வெள்ளியின் விலை அதிரடியாக 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.73க்கும் ஒரு கிலோ ரூ.73,000கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!