நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 20, 2020

0
20th March 2020 CA Tamil
20th March 2020 CA Tamil

தேசிய செய்திகள்

பிரதமர் மோடி மார்ச் 22 அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்

கோவிட் 19 பரவுவதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார்.

  • மிகவும் அவசியமான சூழ்நிலைகளில் மட்டும் வீட்டை விட்டு வெளியேறவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
  • இந்த வைரஸ் தொற்றை எதிர்கொள்ள அனைத்து தரப்பினருடனும் தொடர்பு கொள்ளக்கூடிய, நிதி அமைச்சரின் தலைமையில் ஒரு பணிக்குழுவை உருவாக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

டிசம்பர் 2023 க்குள் அனைத்து அகல பாதை வழிகளையும் மின்மயமாக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது

2023 டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து அகல பாதை வழிகளையும் மின்மயமாக்க இந்திய ரயில்வே (IR) அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே மற்றும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மத்திய ஆயுத போலீஸ் படை தேர்வுகளில் என்.சி.சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் – மத்திய அரசு

மத்திய ஆயுத போலீஸ் படைகளின் நேரடி ஆட்சேர்ப்பு தேர்வுகளில் என்சிசி சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் என்.சி.சி (தேசிய கேடட் கார்ப்ஸ்) இல் இந்தியாவின் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • கான்ஸ்டபிள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு வரவிருக்கும் நேரடி நுழைவுத் தேர்வுகளில் இருந்து இது பொருந்தும்.

என்.சி.சி சான்றிதழ் பிரிவுகள்:

  • C சான்றிதழ்: என்.சி.சி ‘சி’ சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களில் 5 சதவீதத்தை போனஸ் மதிப்பெண்களாகப் பெறுவார்கள்.
  • B சான்றிதழ்: என்.சி.சி ‘பி’ சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களில் 3 சதவீதத்தை போனஸ் மதிப்பெண்களாகப் பெறுவார்கள்.
  • A சான்றிதழ்: என்.சி.சி ‘ஏ’ சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களில் 2 சதவீதத்தை போனஸ் மதிப்பெண்களாகப் பெறுவார்கள்.

சர்வதேச செய்திகள்

கோவிட் -19: டொனால்ட் டிரம்ப் 100 பில்லியன் டாலர் நிவாரணப் நிதிக்கு கையெழுத்திட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 100 பில்லியன் டாலர் அவசர உதவித்தொகை கையெழுத்திட்டார், இது கொரோனா வைரஸால் நோய்வாய்ப்பட்ட அமெரிக்க தொழிலாளர்களுக்கு விடுப்பு நாட்களில் உதவித்தொகை வழங்க உறுதி செய்கிறது.

கொரோனா வைரஸ் பற்றிய உண்மை நிலவரங்களை வெளியிட வாட்ஸ்அப் சர்வதேச உண்மை சரிபார்ப்பு நெட்வொர்க்கிற்கு 1 மில்லியன் நன்கொடை அளித்துள்ளது

WHO (உலக சுகாதார அமைப்பு), யுனிசெஃப் (ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம்) மற்றும் யுஎன்டிபி (ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம்) ஆகியவற்றுடன் இணைந்து பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் “வாட்ஸ்அப் கொரோனா வைரஸ் தகவல் மையத்தை” உலகளவில் அறிமுகப்படுத்தியது.

  • இந்த நோய் குறித்த போலி தகவல்களைத் தவிர்ப்பதற்காக சர்வதேச உண்மை சரிபார்ப்பு நெட்வொர்க்கிற்கு 1 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியது.

நியமனம் மற்றும் ராஜினாமா

COVID-19 குறித்து விழிப்புணர்வை பரப்புவதற்கு நடிகை பிரியங்கா சோப்ரா WHO உடன் இணைத்துள்ளார்

தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக ஹெலத் அமைப்பின் (WHO) உயர் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் மற்றும் கொரோனோ வைரஸ் பற்றிய உண்மையான ஆதாரங்களை நம்புமாறு நடிகை பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதள பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அருந்ததி பட்டாச்சார்யா Crisil குழுவில் இருந்து விலகினார்

Crisil நிறுவனத்தின் இயக்குநரான அருந்ததி பட்டாச்சார்யா தனது ராஜினாமாவை சமர்ப்பித்ததாக கிரிசில் அறிவித்தது, இது ஏப்ரல் 15, 2020 முதல் நடைமுறைக்கு வரும்.

  • அமெரிக்காவின் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் இந்தியா நடவடிக்கைகளுக்கான தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக சேரவுள்ளதால் அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார்.

தரவரிசைகள்

இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மின்சார உற்பத்தியாளர் – சர்வதேச எரிசக்தி நிறுவனம்

பாராளுமன்றத்தில் சர்வதேச எரிசக்தி முகமை தரவரிசையை மின் அமைச்சகம் வெளியிட்டது. அதில் தரவரிசைப்படி, உலகில் மூன்றாவது பெரிய மின்சார உற்பத்தியை இந்தியா கொண்டுள்ளது. மேலும், மூலதன நுகர்வு அடிப்படையில் இந்தியா 106 வது இடத்தில் உள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

2020-21 ஆம் ஆண்டில் 10 பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் உட்பட 36 செயற்கோள்களை இஸ்ரோ ஏவவுள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்

மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளி  அமைச்சர், டாக்டர் ஜிதேந்திர சிங், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) உட்பட 36 செயற்கோள்களை 2020 – 21 ஆம் ஆண்டில் ஏவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

  • இதில் 10 பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களும் அடங்கும்.

பாதுகாப்பு செய்திகள்

பாதுகாப்பு அமைச்சகம் இஸ்ரேலிய நிறுவனத்துடன் ரூ .880 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுடன் ரூ .880 கோடி செலவில் 16,479 லைட் மெஷின் துப்பாக்கிகளை வாங்குவதற்காக இஸ்ரேல் ஆயுத தொழில்களுடன் மூலதன கையகப்படுத்தும் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

டோக்கியோ 2020 அமைப்பாளர்களுக்கு கிரீஸ் ஒலிம்பிக் சுடரை வழங்கியது

கிரீஸ், ஒலிம்பிக் சுடரை டோக்கியோ 2020 அமைப்பாளர்களிடம் ஒப்படைத்துள்ளது.

  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெற உள்ளன. இருப்பினும், கொரோன வைரஸ் பரவிய போதிலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது.

நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ மால்கம் எல்லிஸ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரூ மால்கம் எல்லிஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

  • ரோஸ் டெய்லருக்குப் பிறகு, 100 க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடிய 2 வது வீரர் இவர் ஆவர்.

முக்கிய நாட்கள்

மார்ச் 20 அன்று சர்வதேச மகிழ்ச்சி நாள் அனுசரிக்கப்பட்டது

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதி உலக அளவில் சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய மகிழ்ச்சி இயக்கத்தை ஊக்குவிக்கவும் முன்னேற்றவும் இந்த நாள் நோக்கமாக உள்ளது.

  • 2020 ஆம்  ஆண்டின் சர்வதேச மகிழ்ச்சியின் கருப்பொருள் அனைவருக்கும் ஒன்றான மகிழ்ச்சி என்பதாகும்.

Download Today Current Affairs PDF

CA One Liners in Tamil

Attend Yesterday CA Quiz Here

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!