விடுதலை செய்யப்பட்ட தீவிரவாதி செல்வம், ஆபத்தில் இருந்து மீளாத பாரதி குடும்பம், வருத்தத்தில் சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

0
விடுதலை செய்யப்பட்ட தீவிரவாதி செல்வம், ஆபத்தில் இருந்து மீளாத பாரதி குடும்பம், வருத்தத்தில் சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
விடுதலை செய்யப்பட்ட தீவிரவாதி செல்வம், ஆபத்தில் இருந்து மீளாத பாரதி குடும்பம், வருத்தத்தில் சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
விடுதலை செய்யப்பட்ட தீவிரவாதி செல்வம், ஆபத்தில் இருந்து மீளாத பாரதி குடும்பம், வருத்தத்தில் சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் தீவிரவாதிகள் இரண்டாவது நாளாக மருத்துவமனையில் இருப்பவர்களை பிணை கைதியாக வைத்திருக்க, அவர்களின் கோரிக்கையின் படி செல்வத்தை போலீசார் விடுதலை செய்கின்றனர். செல்வம் விடுதலை செய்யப்பட்டதை கேள்விப்பட்டு சௌந்தர்யா வருத்தப்படுகிறார்

பாரதி கண்ணம்மா

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா லட்சுமியிடம் நீ நேற்றில் இருந்து இங்கே தான் இருக்க.. உனக்கு பயமாக இல்லையா என கேட்க, லட்சுமி பயமாக தான் இருக்கிறது டாக்டர் அப்பாவுடன் ஒரு அங்கிள் வந்தாரே அவரை இவங்க சுட்டு கொன்றுவிட்டதாக சொல்கிறார். உடனே கண்ணம்மா அதை பற்றியே பேசாதே என சொல்ல, பாரதி ஹேமாவிடம் இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் வந்தாய் என கேட்கிறார். எனக்கு பிடித்த எல்லாரும் இங்கே தான இருக்கீங்க அதனால் தான் வந்தேன் என சொல்ல கண்ணம்மா லட்சுமி ஹேமா பாசத்தை பார்த்து சந்தோசப்படுகிறார்.

மறுபக்கம் வெண்பா போன் பேசிக் கொண்டே வந்து கொண்டிருக்க அப்போது அவருக்கு தலை சுற்றி வாந்தி வருகிறது. சாந்தி அதை பார்த்துவிட்டு என்னாச்சு அம்மா என கேட்க ஒன்றுமில்லை சாப்பிட்டது சேராமல் இருக்கும் என சொல்கிறாள். உடனே சாந்தி நீங்க காலையில் இருந்தே சரி இல்லை என சொல்ல, வெண்பா கையை பிடித்து பார்த்து நீங்க கர்ப்பமாக இருப்பதாக சொல்கிறார். வெண்பா பதறி போய் கனவில் இருந்து எழுந்திருக்க அப்போது ரோஹித் வருகிறார். என்னாச்சு வெண்பா பதறி எழுகிறாய் எதாவது நல்ல கனவு கண்டியா என கேட்கிறார். வெண்பா அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்ல ரோஹித் வெண்பாவை நம்பாமல் இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

வெண்பா ரோஹித்தை கிளம்ப சொல்ல, ரோஹித் நீ கர்ப்பமாக இருப்பது போல தான கனவு கண்டாயா என கேட்கிறார். வெண்பா எப்படி இவன் சரியாக சொல்கிறான் என நினைக்க, ஆனால் ரோஹித்திடம் அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்லி சமாளிக்கிறார். வெண்பா அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்ல ரோஹித் கண்டிப்பாக இந்த கனவு பழிக்கும் என சொல்கிறார். மறுபக்கம் தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்று செல்வம் விடுதலை செய்ய இருப்பதாக செய்தியில் சொல்கின்றனர். செல்வம் வந்ததும் 10 பேர் வெளியே அனுப்ப இருப்பதாக சொல்கிறார்கள். சௌந்தர்யா அப்போ லட்சுமி ஹேமா கண்ணம்மா அஞ்சலி வெளியே வந்துருவாங்களா என கேட்க வேணு தெரியவில்லை அவங்க முடிவு என சொல்கிறார்.

முல்லை அம்மாவிடம் சத்தம் போட்ட கதிர், வீட்டை விற்க முடியாமல் கஷ்டப்படும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

சௌந்தர்யா போலீசிடம் சொல்லி அவங்களை அனுப்பி வைக்க சொல்லலாம் என சொல்ல உடனே வேணு கண்டிப்பாக லட்சுமி ஹேமாவை அனுப்புவார்கள் நீ நம்பிக்கை உடன் இரு என சொல்கிறார். மறுபக்கம் நர்ஸ் அழுது கொண்டே இருக்க தீவிரவாதி நர்ஸை கூப்பிடுகிறார். அவருடன் சேர்த்து 10 பேரை விடுதலை செய்ய இருப்பதாக தீவிரவாதிகள் சொல்ல, என்ன எல்லாருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறதா என தீவிரவாதி தலைவன் கேட்கிறான். செல்வத்தை விடுதலை செய்ய ஒப்புக் கொண்டதாக சொல்ல உடனே விடுதலை செய்ய இருக்கும் 10 பேர் வருகின்றனர். மறுபக்கம் போலீசார் செல்வத்தை பலத்த பாதுகாப்புடன் அழைத்து வருகின்றனர். போலீஸ் போன் செய்து செல்வம் வந்து கொண்டு இருப்பதாக தகவல் சொல்ல தீவிரவாதிகள் 10 பேர் தயாராக விடுதலை செய்ய இருப்பதாக சொல்கிறார்கள்.

பின் செல்வத்துடன் ராணுவ வீரர்கள் வருவார்கள் என சொல்ல, தீவிரவாதிகள் சம்மதிக்கின்றனர். ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு செல்வம் வருகிறார். பின் கதவு திறக்கப்பட்டு செல்வம் அனுப்பி வைக்கப்படுகிறார். செல்வம் பத்திரமாக வர 10 பேர் வெளியே அனுப்பப்படுகின்றனர். தீவிரவாதி உங்களை வர வைக்க தான் நாங்க இதெல்லாம் செய்தோம், இன்னும் உங்களுக்கு நிறைய ஆச்சர்யம் இருப்பதாக சொல்கிறார். பின் செய்தியில் 10 பேர் விடுதலை செய்யப்பட்டது குறித்தும் பாரதி குடும்பத்தினர் விடுதலை செய்யப்படாதது பற்றியும், மத்திய அமைச்சர் விடுதலை செய்யப்படாதது பற்றியும் சொல்கின்றனர். செல்வம் விடுதலை செய்யப்பட்டு வருவதை பார்த்து பாரதி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!