முல்லை அம்மாவிடம் சத்தம் போட்ட கதிர், வீட்டை விற்க முடியாமல் கஷ்டப்படும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
முல்லை அம்மாவிடம் சத்தம் போட்ட கதிர், வீட்டை விற்க முடியாமல் கஷ்டப்படும் மூர்த்தி - இன்றைய
முல்லை அம்மாவிடம் சத்தம் போட்ட கதிர், வீட்டை விற்க முடியாமல் கஷ்டப்படும் மூர்த்தி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
முல்லை அம்மாவிடம் சத்தம் போட்ட கதிர், வீட்டை விற்க முடியாமல் கஷ்டப்படும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் புது இடத்தை பார்த்துவிட்டு வந்து பேச, பார்வதி மூர்த்தி வீட்டிற்கு சென்று சண்டை போட்டத்தை பற்றி முல்லை சொல்கிறார். உடனே கதிர் என் அண்ணனை பற்றி எனக்கு தெரியும் என சொல்லி சத்தம் போடுகிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா கல்யாணத்திற்கு மேக்கப் போட செல்ல மீனாவை மூர்த்தி உடன் செல்ல சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி வீட்டை வாங்க கஸ்டமர் ஒருவர் வர அவர் வீட்டை சுற்றிப்பார்க்க வருகிறார். அப்போது அவர் அடுப்படியில் பாத்திரத்தில் என்ன இருக்கிறது என்பதை கூட பார்க்கிறார். அதை பார்த்து மீனா கோபப்படுகிறார். அந்த ஆள் வீட்டை பார்த்துவிட்டு நான் கிளம்புகிறேன் வீட்டிற்கு சென்று விவரத்தை சொல்கிறேன் என சொல்ல, தனத்திடம் மீனா காசு அதிகம் கொடுத்தாலும் இவருக்கு வீட்டை கொடுக்க வேண்டாம் என சொல்ல தனம் சிரித்து கொண்டே சரி என சொல்கிறார்.

மறுபக்கம் கதிர் புது இடத்தை பார்த்துவிட்டு வருகிறார். முருகன் முல்லை வந்தாச்சா என கேட்க ஆமாம் என சொல்கிறார். நல்ல இடம் தான் எல்லாரும் இருக்க வேண்டும் என பெரிய இடமாக பார்த்திருப்பதாக கதிர் சொல்கிறார். நமக்கு எப்படி ரூம் இருக்க வேண்டும் என ஜீவா அண்ணா கேட்டதாக கதிர் சொல்ல, உடனே பார்வதி கடமைக்கு உங்களை அழைத்து சென்றதாக சொல்கிறார். முல்லை அம்மா சென்று சண்டை போட்டதாக சொல்ல, கதிர் எதற்கு போனீங்க என கேட்கிறார். அப்போது பார்வதி இப்படியே விட்டுவிட்டால் கடைசியில் எதற்கும் வரமாட்டோம் அதனால் தான் கேட்டோம் என சொல்ல உடனே கதிர் கோபப்படுகிறார்.

Exams Daily Mobile App Download

என் அண்ணனை விட யாருக்கும் அக்கறை இருக்காது என சொல்கிறார். இனிமேல் என் குடும்பத்திடம் பேசினால் மரியாதை இருக்காது என சொல்கிறார். உடனே முல்லையின் அம்மா கிளம்பி செல்கிறார். மறுபக்கம் மூர்த்தி கடையில் இருந்து வருகிறார். ஜீவா அப்பவே வந்துவிட்டான் நீங்க ஏன் தாமதமாக வருவதாக தனம் கேட்க வேலை இருந்ததாக மூர்த்தி சொல்கிறார். பின் முல்லை அம்மா வந்ததை பற்றி தனம் மூர்த்தியிடம் சொல்கிறார். பின் மூர்த்தி என் தம்பிகளுக்கு என்னை பற்றி தெரியும் என தைரியமாக பேசுகிறார்.

வேலைக்கு செல்ல முடிவு செய்த ஜெனி, திருமண ஏற்பாடுகளை செய்யும் சந்துரு கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

பின் ஐஸ்வர்யாவிற்கு திருமண மேக்கப் ஆர்டர் வந்ததை பற்றி சொல்லி சந்தோசப்படுகிறார். பின் எப்போ போக வேண்டும் என கேட்க காலையில் 4 மணிக்கு போக வேண்டும் என தனம் சொல்கிறார். பின் மூர்த்தி இந்த நேரத்தில் போக வேண்டாம் என சொல்ல, அது எப்படி முகூர்த்தத்திற்கு முன்னாடியே போக வேண்டும் என சொல்கிறார். பின் மூர்த்தி மீனாவை துணைக்கு செல்ல வேண்டும் என சொல்கிறார். மீனாவும் சரி என சொல்கிறார். பின் மூர்த்தி வீட்டை வாங்க வந்தவர்கள் என்ன சொன்னதாக கேட்க மீனா அவர்களுக்கு வீட்டை கொடுக்க வேண்டாம் என நடந்ததை சொல்கிறார். உடனே மூர்த்தி ஜீவாவிடம் வேற ஆட்களை பார்க்க சொல்கிறார்.

மறுபடியும் மீனா இப்படி வீட்டை விற்க அலையாமல் என் அப்பாவிற்கு கொடுக்கலாம் என சொல்ல மூர்த்தி அதெல்லாம் வேண்டாம் இந்த பேச்சை விட்டுவிடு என சொல்கிறார். மீனா கோபத்துடன் ரூமிற்கு வந்து அவருடைய அப்பாவிற்கு போன் செய்ய ஆனால் அவருடைய அப்பா போனை எடுக்கவில்லை. பின் ரூமிற்குள் ஜீவா வர மீனாவின் அப்பா போன் செய்கிறார். மீனா கோவமாக உங்களுக்கு வீட்டை கொடுக்காமல் மற்றவர்களுக்கு கொடுக்க அலைந்து கொண்டிருப்பதாக சொல்கிறார். பின் மீனாவின் அப்பா ஏன் என கேட்க சொந்தக்காரர்களுக்குள் வீட்டை கொடுக்க வேண்டாம் என சொன்னதாக சொல்கிறார்.

இனிமேல் இந்த பேச்சை எடுக்க கூடாது என மூர்த்தி சொன்னதாக சொல்ல ஏன் என்னிடம் இருக்கும் பணத்தை வாங்கினால் என்ன என ஜனார்த்தனன் கேட்கிறார். அதெல்லாம் எனக்கு தெரியவில்லை என மீனா சொல்ல, சரி என பாவம் பார்த்து வாங்கலாம் என நினைத்தால் ரொம்ப பண்ணுகிறார்கள் என மீனாவின் அப்பா சொல்கிறார். இனிமேல் இந்த விஷயத்தை பற்றி பேசாதே என மீனாவிடம் ஜனார்த்தனன் சொல்கிறார். சரி என மீனா போனை வைக்க, ஜீவா இப்பவே உன் அப்பாவிடம் சொல்ல வேண்டுமா என கேட்கிறார். மீனா கோவமாக உன் வீட்டு ஆளுங்களை பற்றி தெரிய வேண்டாமா என கேட்கிறார். தேவை இல்லாமல் பேசாதே என ஜீவா சொல்ல, ஏன் என் அப்பாவிற்கு வீட்டை கொடுக்க வேண்டாம் என மீனா கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!