தமிழகத்தில் 2 ஆம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதித்தேர்வு நிறைவு!

0
தமிழகத்தில் 2 ஆம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதித்தேர்வு
தமிழகத்தில் 2 ஆம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதித்தேர்வு (1)

தமிழகத்தில் 2 ஆம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதித்தேர்வு நிறைவு!

தமிழகத்தில் 2 ஆம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு 2020ல் நடைபெற்றிருந்த நிலையில், அவர்களுக்கான உடல் தகுதித்தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இத்தேர்வுகள் நேற்றுடன் (ஆகஸ்ட் 6) முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் தகுதித்தேர்வு

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த 2 ஆம் நிலைக் காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி போன்ற பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் குறிப்பிட்ட தேர்வுகள் ஆண்களுக்கும், சில தேர்வுகள் ஆண், பெண் உட்பட இருபாலருக்கும் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து இவர்களுக்கான உடல் தகுதித்தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெற இருந்த நிலையில், அவை கொரோனா 2 ஆம் அலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்? நிர்வாகம் முக்கிய முடிவு!

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்துள்ளதால், 2 ஆம் நிலை காவலர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் 2 ஆம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவைகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகளை ரெயில்வே DIG ஜெயகவுரி மேற்பார்வை செய்து வந்தார். இவற்றில் உயரம், மார்பளவு ஆகியவை கணக்கீடு, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடத்தப்பட்டது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 1,662 பேர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 1,231 பேர் என மொத்தம் 2,893 ஆண் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுகளில் 1,517 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப்பணிகள் அனைத்தும் நேற்றுடன் (ஆகஸ்ட் 6) முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுகளை நடத்துவது குறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Download TN PC PET Result 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!