TNTET தேர்வின் தாள்-II நுழைவு சீட்டு – பதிவிறக்கம் செய்யும் முறைகள் உள்ளே!

0
TNTET தேர்வின் தாள்-II நுழைவு சீட்டு - பதிவிறக்கம் செய்யும் முறைகள் உள்ளே!
TNTET தேர்வின் தாள்-II நுழைவு சீட்டு - பதிவிறக்கம் செய்யும் முறைகள் உள்ளே!
TNTET தேர்வின் தாள்-II நுழைவு சீட்டு – பதிவிறக்கம் செய்யும் முறைகள் உள்ளே!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாளுக்கான தேர்வுகள் ஜனவரி 31ம் தேதி முதல் நடக்க உள்ள நிலையில், தற்போது தேர்வின் அட்மிட் கார்டு குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNTET தேர்வு:

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு செய்யப்படும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கான அடிப்படை கல்வியை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் கட்டாயம் தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்று அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான ஆசிரியர் காலிப்பணியிடம் குறித்த அறிவிப்புகள் மார்ச் 7ம் தேதி வெளியிடப்பட்டு, ஏப்ரல் 26ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்நிலையில் CBT முறையில் நடத்தப்பட உள்ள ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாளுக்கான தேர்வுகள் ஜனவரி 31, 2023 முதல் பிப்ரவரி 12, 2023 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கணினி வழித்தேர்விற்கான இணையவழி பயிற்சியினை மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கும் பயிற்சி தேர்வு விருப்பத்தை பயன்படுத்திக் கொள்ள தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்வின் அட்மிட் கார்டு மற்றும் அட்டவணை இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவல்களை உடனடியாக அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளத்தை தேர்வர்கள் தொடர்ந்து கண்காணிக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.

TET PAPER II தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு – Register Now!! முழு விவரம் உள்ளே!!

Follow our Instagram for more Latest Updates

TNTET தேர்வின் தாள்-II நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • முதலில் TN TRB வாரியத்தின் https://trb.tn.nic.in/ என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில், (TNTET) – 2022 என்ற தலைப்பின் கீழ் இருக்கும், கணினி அடிப்படையிலான தேர்வு அனுமதி அட்டைக்கான (தாள் II) என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில், உங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவிட்டு, கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளிடவும்.
  • தற்போது நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!