TN TET 2-ம் தாள் தேர்வுக்கான இரண்டாம் கட்ட ஹால் டிக்கெட் வெளியீடு – தேர்வு மையம் குறித்த விவரங்கள்!

0
TN TET 2-ம் தாள் தேர்வுக்கான இரண்டாம் கட்ட ஹால் டிக்கெட் வெளியீடு - தேர்வு மையம் குறித்த விவரங்கள்!
TN TET 2-ம் தாள் தேர்வுக்கான இரண்டாம் கட்ட ஹால் டிக்கெட் வெளியீடு - தேர்வு மையம் குறித்த விவரங்கள்!
TN TET 2-ம் தாள் தேர்வுக்கான இரண்டாம் கட்ட ஹால் டிக்கெட் வெளியீடு – தேர்வு மையம் குறித்த விவரங்கள்!

தமிழகத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். இந்நிலையில் டெட் 2-ம் தாள் தேர்வுக்கான தேர்வு மையம் குறித்த அறிவிப்பு இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

டெட் தேர்வு

தமிழகத்தில் அனைத்து வித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். அந்த வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் டெட் தேர்வானது இரண்டு தாள்களாக நடத்தப்படுகிறது. ஏற்கனவே 2022-ம் ஆண்டுக்கான டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 16 முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது.

TNPSC Fisheries Inspector தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

அதன் பின் இரண்டாம் தாள் தேர்வானது பிப்ரவரி 3 முதல் 14-ம் தேதி வரை கணினி வழியில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு 4 லட்சத்து 1,886 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கான முதல்கட்ட ஹால்டிக்கெட் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியானது. மேலும் இரண்டாம்கட்ட ஹால்டிக்கெட் தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் தற்போது தேர்வு மையம் குறித்த அறிவிப்பு மற்றும் இரண்டாம் கட்ட ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. தேர்வு எழுத தயாராக இருக்கும் விண்ணப்பதாரர்கள், http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Hall Ticket
Download Notice
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!